என்னோட இடத்துக்கு ஆள சீக்கிரம் பாருங்க. நான் ரிட்டயர்டு ஆக போறேன் – இந்திய முன்னணி வீரர் பேட்டி

Shami
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி எப்பொழுதும் பேட்ஸ்மேன்களை பலமாக கொண்டே வெற்றிகளைப் பெற்று வந்த அணியாக பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி தங்களது சிறப்பான பந்து வீச்சின் மூலம் வெற்றிகளை குவித்து வருகிறது. குறிப்பாக 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் பல உலகத்தரமிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணிக்கு கிடைத்துள்ளனர். இந்திய அணிக்கு அப்படி கிடைத்த வேகப்பந்து வீச்சாளர்களின் பலத்தைக் கொண்டு பல சிறப்பான வெற்றிகளை பெற்றுள்ளது.

shami

- Advertisement -

அப்படி இந்திய அணிக்கு கிடைத்த ஒரு முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. 2013ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஷமி தற்போது வரை தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை இந்திய அணிக்காக 50 டெஸ்ட் போட்டி, 79 ஒருநாள் போட்டி மற்றும் 12 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதுமட்டுமின்றி கடந்த பல ஆண்டுகளாக முன்னணி வீரராகவும் விளங்கி வருகிறார்.

தனது சிறப்பான பந்து வீச்சின் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை தன் வசம் கொண்டுள்ள இவர் தற்போது அளித்துள்ள ஒரு பேட்டியில் தான் விரைவில் ரிட்டயர்டு ஆகி விடுவேன் என்றும் அதனால் எனது இடத்திற்கு வேறு ஒரு மாற்று வீரரை தேர்வு செய்ய விரும்புகிறேன் எனவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் பல வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறேன். எப்பொழுதெல்லாம் என்னிடம் இளம் வீரர்கள் வந்து ஆலோசனை கேட்கிறார்களோ அப்போதெல்லாம் எனக்குத் தெரிந்த அனைத்து விவரங்களையும் நான் சொல்லி விடுவேன்.

Shami

மேலும் நான் எப்போது வேண்டுமானாலும் ஓய்வு பெற வாய்ப்பு உள்ளது. அதனால் எனது இடத்திற்கு விளையாடும் மற்றொருவரை உருவாக்க விரும்புகிறேன். இதற்காக இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தொடர்ச்சியாக ஆலோசனையும் வழங்கி வருகிறேன். எனது ஓய்வு அறிவிப்பை வெளியிடும் போது இந்திய அணிக்காக மாற்று வீரர் தயார் நிலையில் இருப்பார் எனவும் தான் நம்புவதாக கூறியுள்ளார்.

Shami

அவரின் இந்த பேட்டி ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியாக அமைந்துள்ளது. 30 வயதான முகமது சமி அடிக்கடி காயத்தால் அவதிப்படுவதால் டெஸ்ட் போட்டிகளில் இருந்து மட்டும் ஓய்வு பெற முடிவு எடுத்திருக்கலாம் என்று தெரிகிறது. இந்நிலையில் ஜூன் 18 ஆம் தேதி இங்கிலாந்தில் நடைபெற உள்ள இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவர் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement