INDIA : நாளைய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஷமி பங்கேற்பதில் சிக்கல் – விவரம் இதோ

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்திய அணி இதுவரை தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை

Shami-1
- Advertisement -

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்திய அணி இதுவரை தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை வீழ்த்தி நான்கு வெற்றிகளையும், நியூசிலாந்துடனான மழையால் நின்ற போட்டியில் ஒரு டிரா என 9 புள்ளிகளில் உள்ளது.

india

- Advertisement -

இந்திய அணி அடுத்ததாக 27ஆம் தேதி மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளது. நாளை நடைபெற உள்ள போட்டிக்காக இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் நாளைய போட்டியில் ஷமி பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அது யாதெனில் நாளைய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பு இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். எனவே அவர் நாளைய போட்டியில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புவியின் காயம் குணமடைந்ததால் ஷமியின் இடம் பறி போகுமோ என்ற கவலை இந்திய ரசிகர்களிடம் உள்ளது.

Shami

ஹாட்ரிக் நாயகனான ஷமி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை சாய்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் புவி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார் என்பது ஓரளவு முடிவாகி உள்ளது ஏனெனில் அரையிறுதியில் புவனேஷ்வர் குமாரை பயன்படுத்த இந்திய அணி இருபதால் நாளைய போட்டியில் ஷமி தொடர்ந்து விளையாடுவார் என்றே எதிர்பார்க்கலாம்.

Advertisement