ஹாட்ரிக் வாய்ப்பை தவறவிட்ட இந்திய வேகப்பந்துவீச்சாளர். இதை கவனித்தீர்களா ? – விவரம் இதோ

Shami-2
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று இந்தூர் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணியின் கேப்டன் மொமினுள் ஹக் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தற்போது இந்திய அணி முதலில் பந்துவீசியது.

Shami 1

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய பங்களாதேஷ் அணி துவக்க வீரர்கள் இருவரது விக்கெட்டையும் 12 ரன்களுக்கு இழந்தது. அதன் கேப்டன் மொமினுள் ஹக் மற்றும் ரஹீம் ஆகியோர் ஓரளவு சிறப்பாக விளையாடினாலும் அவர்களுக்குப் பின் வந்த வீரர்கள் யாரும் நினைக்கவில்லை.பங்களாதேஷ் அணியில் ஒரு வீரர் கூட அரைசதம் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக இந்திய அணியின் அபார பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 58.3 ஓவர்களில் 150 ரன்களுக்கு பங்களாதேஷ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இன்றைய போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இருப்பினும் அவர் இந்த போட்டியில் ஹாட்ரிக் சாதனையை வீழ்த்த தவறினார்.

Shami

அதன்படி 54 ஆவது ஓவரை வீசிய ஷமி அந்த ஓவரின் 5-வது பந்தில் முஷ்பிகுர் ரஹிமை கிளீன் போல்டு செய்தார். அதற்கடுத்து அடுத்த பந்திலேயே மெஹந்தி ஹாசனை எல்.பி முறையில் வெளியேறினார். இதனால் அவருக்கு ஹாட்ரிக் வாய்ப்பு கிடைத்தது அதை தொடர்ந்து அவர் அடுத்த ஓவரின் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்திருந்தால் அது அவருக்கு டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டாக அமைந்திருக்கும் ஆனால் அவரால் அதனை செய்ய முடியவில்லை. இருப்பினும் ஷமி ஏற்கனவே 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் வீழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement