தென்னாபிரிக்க வீரர்களை சிதறவிட்ட ஷமிக்கு போட்டியின் முடிவில் கிடைத்த பரிசு என்ன தெரியுமா ? – விவரம் இதோ

Shami
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியின் ஆட்டநாயகனாக ரோகித் சர்மா தேர்வானார். ரோஹித் முதல் இன்னிங்சில் 176 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 127 ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் பந்துவீச்சில் அஸ்வின், ஜடேஜா மற்றும் ஷமி என அனைவரும் கலக்கினார்கள். ஷமி இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது இன்னிங்சில் ஷமி சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் வீழ்த்திய அந்த 5 விக்கெட்டுகளும் மிக அற்புதமானவை. மேலும் ஷமி 5 விக்கெட்டுகளில் 4 விக்கெட்டுகளை போல்ட் மூலம் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

When @mdshami.11 strikes ???????? #TeamIndia #INDvSA

A post shared by Team India (@indiancricketteam) on

மேலும் போட்டி முடிந்து இந்த ஆட்டம் குறித்து சாமி சிறிய பேட்டி ஒன்றினை அளித்தார். அந்த பேட்டி முடிந்தபோது நிகழ்ச்சி தொகுப்பாளர் சஞ்சய் மஞ்சரேக்கர் ஷமிக்கு அவர் போல்டாக்கி உடைத்த ஸ்டம்பை பரிசாக அளித்தார். இந்த நிகழ்வு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement