அடுத்தடுத்து இரண்டு யார்க்கர் ரெண்டுமே க்ளீன் போல்ட். அசத்திய ஷமி – வைரலாகும் வீடியோ

Aus
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 340 ரன்கள் குவித்து பெரிய இலக்கினை ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயித்தது.

- Advertisement -

அதன்படி தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 304 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது இதனால் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்று தொடரை சமன் செய்தது. முதல் போட்டியில் அவர்களின் 10 விக்கெட்டுகளை வீழ்த்த முடியாத இந்திய அணி நேற்று அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியது.

இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷமி சிறப்பாக பந்துவீசி 10 ஓவர்களில் 77 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். அதிலும் குறிப்பாக 43 ஓவரில் முதல் இரண்டு பந்துகளையும் யார்க்கராக வீசி அடுத்தடுத்து இரண்டு வீரர்களை க்ளீன் போல்ட் செய்தார். அவரின் இந்த விக்கெட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement