3 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளேன். குடும்ப வாழ்க்கையில் சிக்கல். எதிர்பாராத காயம் – இப்படி ஒரு சிக்கலா ?

Shami-2
- Advertisement -

இந்திய அணிக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அறிமுகமானவர் முகமது ஷமி. வேகப்பந்து வீச்சாளரான இவர் தனது 23வது வயதில் இந்திய அணிக்கு அறிமுகமானார். அதன் பின்னர் 2013ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியிலும், 2014 ஆம் ஆண்டு டி20 போட்டியிலும் அறிமுகமாகி தற்போது வரை ஆடி வருகிறார். இவருக்கு 2015 ஆம் ஆண்டு தனது நீண்டநாள் தோழி உடன் திருமணம் நடைபெற்றது .

Shami 1

- Advertisement -

இரவரது திருமண வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக இல்லை. 2016 ஆம் ஆண்டில் இருவருக்கும் பெரும் சண்டை ஏற்பட்டது. அதன் பின்னர் விபத்தில் சிக்கினார். அந்த காலகட்டத்தில் ஷமி இந்திய அணியிலும் இல்லை. இந்நிலையில் இந்த சர்ச்சைகள் குறித்து தற்போது பேசியுள்ளார் ஷமி.
இதுகுறித்து அவர் கூறுகையில் : 2015 உலக கோப்பை தொடரின் போது காயமடைந்திருந்தேன். அதன் பின்னர் இந்திய அணிக்கு திரும்ப 18 மாதங்கள் ஆனது.

அதுதான் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் மோசமான காலம். அதன் பின்னர் எனது குடும்பத்திலும் பிரச்சனைகள் ஆரம்பித்தன. ஐபிஎல் தொடருக்கு பத்து நாட்கள் இருக்கும் போது விபத்தில் சிக்கி ஐபிஎல் தொடரில் ஆட முடியாமல் போனது. அதே நேரத்தில் எனது தனிப்பட்ட விவகாரங்களில் ஊடகங்கள் பெரிதும் தலையிட்டு என்னை மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கினர்.

Shami 1

எனது குடும்பத்தினரும் என்னை விட்டு கொண்ட கொஞ்சமாக விலகி சென்றனர். அதனால் கிரிக்கெட்டை விட்டு விடலாம் என்று நினைத்தேன். ஒருமுறை தற்கொலை எண்ணம் கூட வந்தது. வீட்டில் யாராவது என்னை என்னுடன் அமர்ந்து கொண்டு கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள்.
24 ஆவது மாடியில் என் வீடு இருந்தது அங்கு இருந்து கீழே குதித்து விடுவேன் என்று பயந்தார்கள் மூன்று முறை இவ்வாறு தற்கொலைக்கு முயற்சி செய்தேன் என்று கூறி ரசிகர்கள் அனைவரையும் திடுக்கிட வைத்துள்ளார் முகமது ஷமி.

- Advertisement -

நான் கடினமான சூழ்நிலையில் இருந்தபோது என் குடும்பத்தில் உள்ளவர்கள் என்னை தேற்றி ஆறுதல் அளித்தனர் என்று கூறினார். இந்தியாவின் அனைத்து அணிகளிலும தற்போது முக்கிய வீரராக ஆடிவரும் முகமது சமி, சிறப்பாக பந்து வீசி வருகிறார். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் 4 போட்டிகளில் 14 விக்கெட்டுகள் வீழ்த்தினார், அதே ஆண்டில் 8 டெஸ்ட் போட்டியில் விளையாடி 33 விக்கெட்டுகளை சாய்த்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Shami

மேலும் இந்திய மண்ணில் மட்டுமின்றி வெளிநாட்டு மண்ணிலும் அசத்தலாக இருக்கும் இவரது பந்துவீச்சு குறித்து பலரும் புகழ்ந்து பேசியுள்ளார்கள். மேலும் நேற்று முன்தினம் கூட இந்திய அணியின் துணைக்கேப்டன் ரோஹித் சர்மா அவர் டெஸ்ட்போட்டியில் அறிமுகமானதில் இருந்து ஷமி உடனான உறவு குறித்து புகழ்ந்து பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement