என்னமா போடுறாரு இதைவிட பர்பெக்ட் யார்க்கர் போடவே முடியாது. ஆப் ஸ்டம்பை தகர்த்த பந்து

Shami
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.

இந்தத் தொடரின் முடிவை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி இன்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மதியம் ஒன்று 1.30 மணிக்கு துவங்கியது. இரு அணிகளுக்கும் சம பலம் வாய்ந்த அணி என்பதால் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

- Advertisement -

அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 131 ரன்களும் மற்றும் மார்னஸ் லாபுஷேன் 54 ரன்களையும் குவித்தனர். இந்திய அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர் முஹம்மது ஷமி சிறப்பாக பந்துவீசி 63 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து தற்போது 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.

இந்த போட்டியிலும் ஷமியின் பந்துவீச்சு அருமையாக இருந்தது. கம்மின்ஸ் மற்றும் ஜாம்பா ஆகியோருக்கு ஷமி வீசிய யார்க்கர் பந்து மிகவும் சிறப்பாக இருந்தது. இந்த இரண்டு பந்துகளையும் பேட்ஸ்மேன்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. இவரது இந்த யார்க்கர் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement