இவர்கள் இருவரால் நிச்சயம் பும்ரா மீதுள்ள அழுத்தம் குறையும். மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு வருவார் – விவரம் இதோ

Bumrah
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடரில் தனது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அடைந்த காயம் காரணமாக அணியில் இருந்து விலகியிருந்த பிறகு பெரும் சிக்கல்களுக்கு மத்தியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்ற பும்ரா இந்த ஒருநாள் தொடரில் மூன்று போட்டிகளிலும் 30 ஓவர்கள் முழுமையாக வீசியும் ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றவில்லை.

Bumrah

- Advertisement -

அது மட்டுமின்றி ஏகப்பட்ட ரன்களை வாரி இறைத்தார். இதனால் நேற்று வெளியான ஐசிசி ஒருநாள் தரவரிசை பந்துவீச்சாளர்கள் பட்டியலில் கூட அவர் தனது முதலிடத்தை இழந்தார். இதனால் தற்போது பும்ராவின் பந்துவீச்சு மீது ரசிகர்கள் சற்று வருத்தத்தை காண்பித்து வருகின்றனர். ஆனால் நிச்சயம் பும்ரா இந்த சிக்கலில் இருந்து மீண்டு வருவார். காயத்திலிருந்து ஒரு வீரர் மீண்டுவந்து சர்வதேச போட்டிகளில் பந்து வீசும்போது உடனே தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பது என்று எதிர்பார்ப்பது தவறு.

முதலில் அவருக்கு சிறிது நேரம் கொடுக்க வேண்டும் பின்னர் அவர் திறனை நிச்சயம் எடுத்து வருவார். மேலும் தற்போது அவர் காயத்திலிருந்து மீண்டு மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதனால் அவர் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடாது. தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் அவர் நிச்சயம் தனது சிறப்பான பங்களிப்பை அளிப்பார். அவ்வாறு அவர் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் போது மீண்டும் தனது பார்முக்கு திரும்ப வாய்ப்பு உள்ளது.

Bumrah-2

அதன் முக்கிய காரணம் யாதெனில் இந்திய அணியில் சிறந்த பந்து வீச்சாளரான முகமது சமி உள்ளார். அவர் தனது தொடர்ச்சியான பந்துவீச்சை மூன்று வடிவத்திலும் காண்பித்து வருகிறார். இந்த தொடரிலும் ஷமியின் பந்துவீச்சு அபாரமாக இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி இளம் வேகப்பந்துவீச்சாளர் சைனி தனது அபாரமான வேகம் மற்றும் பவுன்சர்களால் எதிரணி மிரட்டுகிறார். இவர்கள் இருவரும் இந்த தொடரில் பும்ராவுடன் இணைந்து பந்துவீசும் போது பும்ராவின் அழுத்தம் நிச்சயம் குறையும்.

shami

இதனால் பும்ராவின் பந்துவீச்சு திறனும் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு சில போட்டிகளில் அவர் சரியாக பந்துவீசிய இல்லையென்றால் அவரை அப்படி கணக்கில் கொள்ளக் கூடாது மீண்டும் தனது திறமையால் பும்ரா நம்பர்-ஒன் இடத்திற்கு வருவார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

Advertisement