- Advertisement -
உலக கிரிக்கெட்

Shakib : உலகசாதனையை படைத்த முத்த பங்களாதேஷ் வீரர் – ஷாகிப் அல் ஹசன்

உலகக் கோப்பை தொடரின் 31 ஆவது போட்டி நேற்று சவுதாம்டன் நகரின் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் மோர்தசா தலைமையிலான ஒரு வங்கதேச அணியும், குல்பதின் நயிப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக முஸ்டபிகுர் ரஹீம் 83 ரன்களையும், ஷாகிப் 51 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 47 ஓவர்களில் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 200 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக வங்கதேச அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்கதேச அணி சார்பாக சாகிப் சிறப்பாக பந்து வீசி 29 விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். மேலும் ஆட்டநாயகன் விருதையும் அவரை தட்டி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடரில் தொடர்ந்து ரன் குவிப்பில் அசத்தி வரும் ஷாகிப் அல் ஹசன் இரண்டு சதங்கள் மற்றும் மூன்று அரை சதங்கள் என 476 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்து 447 ரன்களுடன் வார்னர் இரண்டாம் இடத்தில் உள்ளார். இது மட்டுமின்றி உலக கோப்பை தொடரில் ஆயிரம் ரன்களை கடந்த முதல் பங்களாதேஷ் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தி உள்ளார். அவர் நேற்றைய போட்டியில் 35 ரன்களை எட்டியபோது இந்த சாதனையை படைத்தார் இதுவரை 27 ஆட்டங்களில் அடி 1016 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by