4000 நாட்கள்.. பிட்ச் பிரச்சனையில்ல.. பாகிஸ்தான் மாதிரி இதனால தான் இந்தியாவை வீழ்த்த முடியல.. ஷாகிப் பேட்டி

Shakib Al Hasan
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதனால் பாகிஸ்தானை போல வீழ்த்துவோம் என்று சொன்ன வங்கதேசத்தை தோற்கடித்த இந்தியா 1 – 0* என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி செப்டம்பர் 27ஆம் தேதி கான்பூரில் துவங்குகிறது.

இந்நிலையில் இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற பெரிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் பிட்ச் பற்றி குறை சொல்வதில் எந்த பயனும் இல்லை என ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார். ஏனெனில் வலுவான வீரர்களை கொண்ட இந்தியா போன்ற அணிகளை தோற்கடிப்பது கடினம் என்று அவர் கூறியுள்ளார். குறிப்பாக இந்தியா தங்களது சொந்த மண்ணில் கடந்த 4000க்கும் மேற்பட்ட நாட்களாக தொடரில் தோற்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

வலுவான இந்தியா:

மறுபுறம் பாகிஸ்தான் கொஞ்சம் புதிய அணியாக இருந்ததால் அதைப் பயன்படுத்தி வீழ்த்தியதாக தெரிவிக்கும் ஷாகிப் அல் ஹசன் இது பற்றி பேசியது பின்வருமாறு. “மற்ற நாடுகள் தங்கள் சொந்த மண்ணில் ஓரிரு போட்டிகளில் தோற்கின்றன. ஆனால் இந்தியா சொந்த மண்ணில் தோற்பதை நீங்கள் கடினமாகவே பார்க்க முடியும். வங்கதேசத்தில் அவர்களுக்கு எதிராக (2022இல்) ஒருநாள் தொடரை வென்ற நாங்கள் டெஸ்ட் போட்டியில் வெற்றியை நெருங்கினோம்”

“அது போன்ற வெற்றியை 2வது போட்டியில் பெறுவதற்கு மற்றுமொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. சென்னையில் நாங்கள் அவ்வப்போது நன்றாக விளையாடினோம். இருப்பினும் மூன்றரை நாட்களில் தோற்றது சரியல்ல. அதை விட நாங்கள் எங்களை சிறந்த அணியாகவே பார்க்கிறோம். அதை இரண்டாவது போட்டியில் காட்ட வேண்டும். பாகிஸ்தான் கொஞ்சம் புதிய அணி”

- Advertisement -

வலுவான இந்தியா:

“குறிப்பாக அனுபவத்தில் அவர்களை விட எங்கள் வீரர்கள் கொஞ்சம் அதிகப் போட்டிகளில் விளையாடியுள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் அனுபவம் மிகவும் முக்கியம். இந்திய அணியை பொறுத்த வரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தற்போது நம்பர் ஒன் இடத்தில் உள்ளனர். 4000 நாட்களாக அவர்கள் சொந்த மண்ணில் தோற்காமல் இருப்பதாக சமீபத்தில் ஒரு புள்ளிவிவரத்தை பார்த்தேன்”

இதையும் படிங்க: 306 ரன்ஸ்.. 147 வருட வரலாற்றில் கமிண்டு மெண்டிஸ் யாரும் செய்யாத உலக சாதனை.. நியூஸிலாந்தை பந்தாடும் இலங்கை

“அதுவே அவர்கள் எந்தளவுக்கு வலுவான அணி என்பதை காட்டுகிறது. இந்தியாவுக்கு வெளியேயும் அவர்கள் நன்றாக செயல்படுகின்றனர். இந்தியாவுக்கு வரும் எந்த அணிக்கும் வெற்றி பெறுவது கடினமாக இருக்கும். நாங்களும் அதற்கு விதிவிலக்கல்ல. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அணிகளுக்கு எதிராக பிட்ச் முக்கியமல்ல. ஏனெனில் அவர்களிடம் உள்ள பலத்தை வைத்து எங்களை அட்டாக் செய்வார்கள். எனவே சென்னை போட்டியை விட நாங்கள் நன்றாக விளையாட வேண்டும்” என்று கூறினார்.

Advertisement