இதுக்கு தான் அவங்களுக்கு வழிவிடுங்கன்னு சொன்னேன்.. எல்லா பந்துலயும் சிக்ஸ் அடிப்பீங்களா? ஷாகிப்பை விளாசிய சேவாக்

Virender Sehwag 4
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் வங்கதேச கிரிக்கெட் அணி தங்களுடைய முதல் சூப்பர் 8 போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்தது. அந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான 2வது போட்டியிலும் 50 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் தோற்றது. அதனால் கடைசி போட்டியில் வென்றாலும் அந்த அணி செமி ஃபைனல் செல்வதற்கான வாய்ப்பு கேள்விக்குறியாக காணப்படுகிறது.

முன்னதாக உலகிலேயே 2007 முதல் இதுவரை நடைபெற்ற அனைத்து டி20 உலகக் கோப்பைகளிலும் விளையாடிய வீரர்கள் என்ற பெருமையை ரோகித் சர்மா, ஷாகிப் அல் ஹசன் பெற்றுள்ளனர். அந்த நிலையில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான முக்கிய போட்டியில் சுமாரான ஷாட்டை அடித்து அவுட்டான ஷாகிப் அல் ஹசன் வங்கதேசத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தார்.

- Advertisement -

மீண்டும் சேவாக் விமர்சனம்:
அப்போது நீங்கள் மேத்தியூ ஹைடன் அல்லது ஆடம் கில்கிறிஸ்ட் கிடையாது என்பதால் வங்கதேச வீரரை போல் விளையாடுமாறு அவரை முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர் வீரேந்தர் சேவாக் விமர்சித்தார். அது போக தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் சுமாராக விளையாடும் ஷாகிப் அல் ஹசன் பேசாமல் வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு இளம் வீரர்களுக்கு வழி விட்டு ஓய்வு பெறலாம் என்றும் சேவாக் தெரிவித்திருந்தார்.

அந்த சூழ்நிலையில் கத்துக்குட்டியான நெதர்லாந்துக்கு எதிரான அடுத்த போட்டியிலேயே வங்கதேசம் வெற்றி கண்டது. அந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய சாகிப் அல் ஹசன் ஆட்டநாயகன் விருதை வென்றார். அப்போது சேவாக் சொன்ன விமர்சனங்களுக்கு உங்களுடைய பதில் என்ன? என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு “சேவாக் யார்?” என்று ஷாகிப் அல் ஹசன் பதிலடி கொடுத்தது வைரலானது. ஆனால் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 11 (7) ரன்கள் மட்டுமே எடுத்த ஷாகிப் மீண்டும் வங்கதேசத்தின் தோல்விக்கு ஒரு காரணமானார்.

- Advertisement -

அதனால் மீண்டும் அவரை கிரிக்பஸ் இணையத்தில் சேவாக் விமர்சித்துள்ளது பின்வருமாறு. “களத்தில் செட்டிலான பேட்ஸ்மேன் எதிரில் இருக்கும் போது நீங்கள் குறைந்தது அவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். களத்தில் கொஞ்சம் நேரம் செலவிட்டு போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கு வேண்டும். அதை விட்டுவிட்டு 7 பந்தில் 11 ரன்னில் அடித்து பெவிலியன் திரும்பவதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை”

இதையும் படிங்க: அன்னைக்கும் தூங்கல.. இன்னைக்கும் தூங்க மாட்டேன்.. ஆஸ்திரேலிய போட்டிக்கு பின்னர் பேசிய – ரஷீத் கான்

“தம்மிடம் நிறைய அனுபவம் இருந்தும் அதை ஷாகிப் பயன்படுத்தவில்லை அல்லது அதைப்பற்றி அவர் அக்கறைப்படுவதில்லை அல்லது இலக்கு பெரிதாக இருப்பதால் முதல் சிக்ஸ் அடித்த நான் ஒவ்வொரு பந்திலும் சிக்ஸர் அடிப்பேன் என்று அவர் நினைக்கிறார். இதனாலேயே அவர் இளம் வீரர்களுக்கு வழி விட வேண்டும் என்று நான் கடந்த முறையே சொன்னேன்” எனக் கூறினார்.

Advertisement