IND vs WI : 100 ஆவது ஒருநாள் போட்டியில் அசத்தலான சாதனைக்கு சொந்தக்காரராகிய – வெ.இ வீரர்

Shai-Hope
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது வெஸ்ட் இன்டீஸில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற இந்திய அணியானது இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Siraj

- Advertisement -

அதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று அதே குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் நிக்கோலாஸ் பூரான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி தற்போது முதலில் பேட்டிங் செய்து முடித்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்களை குவித்து அசத்தியது. இதன் காரணமாக 312 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

Hope

இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க வீரரான ஷாய் ஹோப் 135 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 115 ரன்கள் குவித்து அமர்க்களப்படுத்தினார். அதிலும் குறிப்பாக அவர் அடித்த இந்த சதத்தில் மிகச் சிறப்பான பல சாதனைகள் மறைந்துள்ளன.

- Advertisement -

அதன்படி இன்றைய போட்டி அவருக்கு நூறாவது ஒருநாள் போட்டியாக அமைந்த வேளையில் நூறாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் தற்போது சாய் ஹோப் இணைந்துள்ளார். இதற்கு முன்னதாக வெஸ்ட் இண்டிஸ் அணி சார்பாக கிரிஸ் கெயில் மற்றும் சர்வான் போன்றோர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக தாங்கள் விளையாடிய நூறாவது போட்டியில் சதம் அடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : IND vs WI : இருந்தாலும் இவ்ளோ ஸ்ட்ரிக்ட்டா நடந்துக்கக்கூடாது – கடைசி நேரத்தில் இந்தியாவை தண்டித்த ஐசிசி, முழுவிவரம்

அதோடு நூறாவது ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ரன்கள் அடித்தவர்கள் பட்டியலிலும் நியூசிலாந்து வீரர் க்றிஸ் கெய்ன்ஸ்(115) மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் சர்வான்(115) ஆகியோருடன் நான்காவது இடத்தினை சாய் ஹோப்(115) பகிர்ந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement