தனது ஆல்டைம் லெவன் அணியில் ஒரே ஒரு இந்திய வீரரை மட்டும் தேர்வு செய்த அப்ரிடி – பட்டியல் இதோ

Afridi
- Advertisement -

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக உலகெங்கிலும் தற்போது அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் விளையாட்டு வீரர்கள் அனைவரும் செய்வதறியாது வீட்டிற்குள் முடங்கி உள்ளனர். அனைத்து வகையான விளையாட்டு போட்டிகளும் நடைபெற அடுத்த சிலமாதங்களுக்கு வாய்ப்பில்லை.

afridi

- Advertisement -

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் இந்த ஓய்வு நாளை கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நிபுணர்கள் என அனைவரும் ரசிகர்களின் கேள்விகளுக்கு சமூக வலைதளம் மூலம் பதிலளித்து வருகின்றனர். அதன்படி பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான அப்ரிடி தான் விளையாடிய காலத்தில் இருந்த வீரர்களை வைத்து சிறந்த அணியை (பெஸ்ட் 11) தேர்வு செய்துள்ளார்.

இந்த லெவன் அணியில் சாகித் அப்ரிடி அவரது காலகட்டத்தில் விளையாடிய வீரர்களைக் கொண்டு உருவாக்கியுள்ளார். அதன்படி இந்த அணியின் துவக்க வீரர்களாக பாகிஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சையது அன்வர் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரரான கில்கிரிஸ்ட் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.

Afridi

மேலும் ரிக்கி பாண்டிங்கை மூன்றாவது இடத்திற்கும், நான்காவது இடத்தில் சச்சினை மட்டுமே இந்திய வீரர் ஒருவராக தேர்வு செய்துள்ளார். அதனை தொடர்ந்து இன்ஜமாம் உல் ஹக், ரஷிட் லதீப் ஆகியோரை அடுத்தடுத்த இடத்தில் தேர்வு செய்துள்ளார். பெரும்பாலான வீரர்களை அவர் பாகிஸ்தான் அணியில் இருந்தே தேர்வு செய்துள்ளார்.

- Advertisement -

மேலும் இந்தப் பட்டியலில் ஆல்-ரவுண்டராக காலிஸ் மற்றும் வாசிம் அக்ரமை சேர்த்துள்ளார். பந்துவீச்சாளர்கள் பட்டியலில் மெக்ராத், சோயப் அக்தர் மற்றும் ஷேன் வார்ன் ஆகியோரையும் இணைத்துள்ளார். அதன்படி அவர் வெளியிட்ட லெவன் அணி இதோ :

sachin

சையது அன்வர், ஆடம் கில்கிறிஸ்ட், ரிக்கி பாண்டிங், சச்சின், இன்சமாம் உல் ஹக், ரசித் லடிப், வாசிம் அக்ரம், காலிஸ், கிளன் மெக்ரா , சோயிப் அக்தர், ஷேன் வார்ன்.

Advertisement