
ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிர்க்கெட் அணி தயாராகி வருகிறது. இம்முறை அயர்லாந்தை தங்களுடைய முதல் போட்டியில் எதிர்கொள்ளும் இந்தியா ஜூன் 9ஆம் தேதி நியூயார்க் நகரில் பரம எதிரி பாகிஸ்தானை 2வது போட்டியில் சந்திக்கிறது.
கடைசியாக 2022 டி20 உலகக் கோப்பையில் விராட் கோலியின் அற்புதமான ஆட்டத்தால் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா வரலாற்று வெற்றியை பெற்றது. மேலும் 2021இல் துபாயில் 10 விக்கெட் வித்தியாசத்தில் சந்தித்த தோல்வியை தவிர்த்து டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானை எதிர்கொண்ட அனைத்து போட்டிகளிலும் இந்தியா வெற்றி கண்டுள்ளது. எனவே இம்முறையும் பாகிஸ்தானுக்கு வீழ்த்தி இந்தியா வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பவரான பாகிஸ்தான்:
மறுபுறம் 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பையில் தோல்விகளை சந்தித்த பாகிஸ்தான் அணி மீண்டும் பாபர் அசாம் தலைமையில் களமிறங்குகிறது. இந்நிலையில் உலகிலேயே மற்ற நாடுகளை விட பாகிஸ்தானின் பவுலின் மிகவும் பவராகவும் வலுவாகவும் இருப்பதாக முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
அதனால் இந்தியா போன்ற எதிரணிகள் இம்முறை தங்களை வீழ்த்துவது கடினம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஐசிசி இணையத்தில் பேசியது பின்வருமாறு. “இந்த உலகில் இருக்கும் எந்த கிரிக்கெட் அணியிலும் இது போன்ற வலுவான பவுலிங் லைன்-அப் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்கள் நிறைய திறமைகளை கொண்டுள்ளனர். சொல்லப்போனால் பெஞ்சில் அமர்ந்திருக்கும் அப்பாஸ் அப்ரிடி கூட ஸ்லோயர் பந்துகளை வீசுவதில் நிறைய திறமையை கொண்டுள்ளார்”
“அது போன்ற திறமை கொண்டுள்ள வீரர்கள் உலகக் கோப்பையில் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களுக்கு எதிராக நன்றாக செயல்படுவார்கள். இம்முறை ஷடாப் கான் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட வேண்டும். அவர் பந்து வீச்சில் அசத்திய போதெல்லாம் பாகிஸ்தான் வென்றுள்ளது. அவருடைய கடந்த கால போட்டிகளை நான் பார்த்துள்ளேன். அவருடன் நேற்று நான் விரிவாக விவாதித்தேன்”
இதையும் படிங்க: டி20 உலககோப்பையில் விராட் கோலிக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சவால் – பதிலடி கொடுப்பாரா விராட் கோலி
“தற்போது அவர் மோசமான காலத்தில் இருக்கிறார் என்பது எனக்கு தெரியும். எனவே அவரைப் போன்ற வீரர்களுக்கு நான் உத்வேகத்தை கொடுக்க முயற்சித்தேன். அதை பின்பற்றி பயிற்சிகளை எடுக்கும் போது அவர் வித்தியாசமாக செயல்படுவதை உங்களால் பார்க்க முடியும்” என்று கூறினார். இருப்பினும் ஷாஹின் அப்ரிடி, ஹரிஷ் ரவூப், நாசீம் ஷா போன்ற பாகிஸ்தான் பவுலர்களை 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பையில் அடித்து நொறுக்கி இந்தியா வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.