எந்த 11 பேரை அனுப்பியிருந்தாலும் இந்தியாவை அங்கு வீழ்த்த முடியாது – ஷாஹித் அப்ரிடி புகழாரம்

Afridi
- Advertisement -

அண்மையில் நடைபெற்று முடிந்த 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது கைப்பற்றி அசத்தியிருந்தது. கடைசியாக 2013 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றி இருந்த வேளையில் தற்போது 12 ஆண்டுகள் கழித்து ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அந்த பட்டத்தை கைப்பற்றியது அனைவரது மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவை யாராலும் வீழ்த்த முடியாது : ஷாஹித் அப்ரிடி

அதிலும் குறிப்பாக நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காமல் இறுதி போட்டி வரை வந்து இறுதிப் போட்டியிலும் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி இந்திய அணி எந்த இடத்திலும் சரிவை சந்திக்காமல் சாம்பியன் அணியாக இந்த தொடரை வென்றுள்ளது அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை குவித்து வருகிறது.

- Advertisement -

அதோடு இந்த வெற்றியின் மூலம் மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றுள்ள இந்திய அணி அதிக முறை சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை வென்ற அணியாகவும் சாதனை நிகழ்த்தியுள்ளது. இந்நிலையில் இந்திய அணி துபாயில் மட்டுமே விளையாடி வந்தது பலரது மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்த வேளையில் இந்த தொடரை வெல்ல தகுதியான அணி இந்திய அணி தான் என்றும் உலகில் உள்ள எந்த ஒரு 11 பேரை தேர்வு செய்து துபாய்க்கு அனுப்பி இருந்தாலும் அங்கு இந்திய அணி தான் வெற்றி பெற்றிருக்கும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான சாகித் அப்ரிடி புகழாரம் சூட்டியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்திய அணி உண்மையிலேயே இந்த வெற்றிக்கு தகுதியான ஒரு அணிதான். ஏனெனில் அவர்களது உள்நாட்டு கட்டமைப்பு, அகாடமி மற்றும் கிரிக்கெட்டிற்கு தேவையான அனைத்து வகையான அடிப்படை ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டிருக்கின்றன. அதன் பலனாக தான் தற்போது இந்திய அணி தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்று வருகிறது.

- Advertisement -

அதோடு சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியின் தேர்வும் மிகச் சிறப்பாக இருந்துள்ளது. ஏனெனில் துபாய் மைதானத்திற்கு ஏற்ப அவர்கள் தங்களது அணியின் வீரர்களை தேர்வு செய்துள்ளனர். இந்த மைதானத்திற்கு எந்தெந்த வீரர்கள் தேவையோ அந்தந்த வீரர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

இதையும் படிங்க : மைதானத்தில் வைத்து குல்தீப் யாதவை திட்டியது ஏன்? ரோஹித் சர்மா கொடுத்த விளக்கம் – விவரம் இதோ

குறிப்பாக இந்திய அணியில் இடம் பெற்று விளையாடிய 11 பேருமே மேட்ச் வின்னர்கள் தான் என்பதனால் இந்திய அணிக்கு எதிராக எந்த ஒரு 11 பேரை தேர்வு செய்து அனுப்பி இருந்தாலும் நிச்சயம் இந்தியாவை துபாய் மண்ணில் வீழ்த்திருக்க முடியாது என்றே நான் கூறுவேன் என இந்திய அணியை பாராட்டி அப்ரிடி பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement