இந்திய அணியில் இவங்க ரெண்டு பேரோட பேட்டிங் எனக்கு ரொம்ப பிடிக்கும் – ஷாஹித் அப்ரிடி ஓபன் டாக்

Afridi
- Advertisement -

பாகிஸ்தானின் அதிரடி வீரராக இருந்தவர் சாகித் அப்ரிடி. கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன்னரே 16 வயதில் சதம் அடித்து பல சாதனைகளைப் படைத்தார் . சமீபகாலமாக பாகிஸ்தான் வீரர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும் சமூகவலைதளத்தில் முட்டலும் மோதலும் ஆகவே இருந்து வருகிறது.

afridi

அந்த அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி, சோயிப் அக்தர் போன்றோர் இந்திய வீரர்களை மறைமுகமாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் ட்விட்டரில் #AskAfridi என்ற ஒரு துனுக்கை பயன்படுத்தி பாகிஸ்தானின் முன்னாள் வீரர் அப்ரிடியிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது.

- Advertisement -

ரசிகர் ஒருவர் கூட தோனி மற்றும் பாண்டிங் ஆகிய இருவரில் யார் மிகச் சிறந்த கேப்டன் என்று கேட்டிருந்தார். அதற்கு கொஞ்சமும் யோசிக்காமல் தோனிதான் சிறந்த கேப்டன் கேப்டன் என்று கூறினார் சாகித் அப்ரிடி.

Kohli-3

இந்நிலையில் இந்தியாவில் அவருக்கு பிடித்த பேட்ஸ்மென்கள் யார் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவர்தான் இந்தியாவில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்கள். அவர்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார் சாகித் அப்ரிடி.

Kohli

கோலி சர்வதேச போட்டிகளில் 23 ரன்களை குவித்து விட்டார். 70 சதம் அடித்துள்ளார். ரோகித் சர்மா கிட்டத்தட்ட ஒரு நாள் போட்டிகளில் 10,000 ரன்களை நெருங்கிவிட்டார் சர்வதேச டி20 போட்டிகளில் நான்கு முறை சதம் அடித்துள்ளார்.

Advertisement