இப்போ இந்தியா எந்த மூஞ்சிய வெச்சுட்டு வருவாங்க.. எங்க சுத்துனாலும் பாகிஸ்தான்கிட்ட வந்தாகனும்.. அப்ரிடி பேட்டி

Shahid Afridi
- Advertisement -

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே எல்லையில் தற்சமயத்தில் உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது. சமீபத்தில் இந்திய சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினார்கள். அதனால் 26 அப்பாவி மக்கள் இயற்கை எழுதியதைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்திய அரசாங்கம் ராணுவ நடவடிக்கைகள் எடுத்தது. இதற்கிடையே இங்கிலாந்தில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடும் லெஜெண்ட்ஸ் லீக் டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

அந்தப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி விளையாடுவதாக இருந்தது. அதற்கு இந்தியர்களுக்கு பங்கம் விளைவிக்கும் பாகிஸ்தானுடன் விளையாடலாமா? என்று சமூக ஊடகங்களில் எதிர்ப்புகள் வந்தன. அதைத் தொடர்ந்து ரெய்னா, தவான், ஹர்பஜன் உள்ளிட்ட இந்திய வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவதிலிருந்து விலகுவதாக அறிவித்தார்கள்.

- Advertisement -

எங்க சுத்துனாலும்:

அதன் காரணமாக மொத்த இந்திய கிரிக்கெட் அணியும் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட மறுத்தது. அதனால் அப்போட்டி ரத்து செய்யப்பட்டு இரு அணிக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்து கொடுக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற தொடரில் பாகிஸ்தான் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றது. மறுபுறம் இந்தியா 4வது இடத்தைப் பிடித்து செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ளது.

அதன் காரணமாக முதல் அரை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதுவதற்கு தகுதி பெற்றனர். ஆனால் அந்தப் போட்டியிலும் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடாமல் விலக உள்ளதாக செய்திகள் காணப்படுகின்றன. சொல்லப்போனால் அந்த போட்டிக்கு ஸ்பான்சர்ஷிப் செய்வதிலிருந்து விலகுவதாக “ஈஸ்மைட்ரிப்” என்ற இந்திய நிறுவனம் அறிவித்துள்ளது.

- Advertisement -

அப்ரிடி கருத்து:

இந்நிலையில் இந்தியா எங்கே சுற்றினாலும் கடைசியில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட வந்தாக வேண்டும் என்று அந்த அணியின் கேப்டன் சாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “லீக் சுற்றில் எங்களுக்கு எதிராக விளையாடாமல் விலகிய இந்தியா, தற்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு பாகிஸ்தானுக்கு எதிராக செமி ஃபைனலில் விளையாடுவார்கள் என்று தெரியவில்லை”

இதையும் படிங்க: அப்படி எந்த ரூல்ஸ் சொல்லுது? இந்திய அணிக்கு கிரிக்கெட்டை பற்றி எதுவுமே தெரியாதா? கேப்டன் கில் பதிலடி

“ஆனால் இறுதியில் அவர்கள் எங்களுக்கு எதிராக மட்டுமே விளையாட வந்தாக வேண்டும்” என்று கூறினார். இதற்கிடையே 2025 ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்தத் தொடரில் தங்களை புறக்கணித்தாலும் ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எப்படியும் விளையாட வந்தாக வேண்டும் என்று அப்ரிடி மறைமுகமாக தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement