அப்ரிடி 37 பந்துகளில் 100 ரன்களை அடித்த பேட். இந்த இந்திய வீரர் பரிசாக அளித்ததாம் – வெளியான ரகசியம்

Afridi

பாகிஸ்தான் அணியின் முன்னாள் அதிரடி வீரரான சாஹித் அப்ரிடி சர்வதேச கிரிக்கெட்டில் தான் விளையாடிய இரண்டாவது ஒருநாள் போட்டியிலேயே 37 பந்துகளில் 100 ரன்கள் அடித்து அதிவேக சதம் அடித்தவர் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். அந்த ஆட்டத்தில் அவர் நாற்பது பந்துகளை சந்தித்து 104 ரன்கள் எடுத்திருந்தார்.

Afridi-1

கிட்டத்தட்ட 18 வருடங்களாக அந்த சாதனையை யாருமே முடிவெடுக்கவில்லை. அதன்பின்னர் அந்த சாதனையை தென் ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் முறியடித்தார். இந்நிலையில் அவர் தற்போது அந்த அதிரடியான ஆட்டத்திற்கு பயன்படுத்திய பேட் அவருக்கு சொந்தமானது இல்லை என்றும் அதை இந்திய வீரர் ஒருவர் பரிசளித்ததாகவும் முன்னாள் பாக் வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான அசார் முகமது கூறுகையில் : அப்ரிடி அப்பொழுது பந்துவீச்சாளர் எப்பொழுதும் ஆறாவது இடத்திலேயே களமிறங்கி பேட்டிங் செய்வார். ஆனால் இலங்கை அணிக்கு எதிரான வியூகத்தில் அப்ரிடி மூன்றாவதாக இறக்க திட்டமிட்டனர். அப்போது வக்கார் யூனிஸ் ஒரு பேட்டை கொடுத்து அவரிடம் விளையாட சொன்னார்.

Afridi 2

அது சச்சினால் பரிசாக கொடுக்கப்பட்டது. அந்த ஆட்டத்திற்கு பிறகு ஒரு பந்து வீச்சாளர் என்ற நிலையிலிருந்து பேட்ஸ்மேன், ஆல்ரவுண்டர், கேப்டன் என பல இடங்களுக்கு சென்று விட்டார் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் அப்படியும் தான் சச்சினால் பரிசளிக்கப்பட்ட பேட்டை பயன்படுத்தி அந்த ரன்கள் அடித்தது தெரியவந்ததும் அப்ரிடி நிகழ்ச்சி அடைந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

Afridi 3

அப்ரிடி 1996 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆகி 2018 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் அந்த அணிக்காக விளையாடி 27 டெஸ்ட் போட்டிகள் 398 ஒருநாள் போட்டிகள் மற்றும் 99 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.