பாகிஸ்தானின் பொருள் பலவீனமாகிடுச்சு.. அந்த இந்திய வீரரை பாத்து கத்துக்கோங்க.. பாபருக்கு அப்ரிடி அறிவுரை

Shahid Afridi
- Advertisement -

ஐசிசி டி20 2024 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச டி20 போட்டிகளின் புதிய சாம்பியனாக சாதனை படைத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெற்ற அந்தத் தொடரில் தோல்வியை சந்திக்காமல் மிரட்டிய இந்தியா ஃபைனலில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்தது. அதனால் டி20 உலகக் கோப்பையை 2 முறை வென்ற முதல் ஆசிய அணியாகவும் இந்தியா சாதனை படைத்தது.

இந்த வெற்றியுடன் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ரவீந்திரன் ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றுள்ளனர். முன்னதாக இந்த தொடரில் ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் பலராலும் பாராட்டப்பட்டது. ஏனெனில் ஐசிசி தொடரில் மெதுவாக விளையாடினால் வேலையாகாது என்பதை உணர்ந்த அவர் சொந்த சாதனைகளை பற்றி கவலைப்படாமல் எதிரணிகளை அடித்து நொறுக்க வேண்டும் என்ற அணுகுமுறையை இந்திய அணியில் கொண்டு வந்துள்ளார்.

- Advertisement -

அப்ரிடி அறிவுரை:
இந்நிலையில் பாபர் அசாம் கேப்டன்ஷிப் பற்றி இந்தியாவின் ரோகித் சர்மாவை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன் பாகிஸ்தான் பலவீனமாக மாறிப் போயுள்ளதாக கவலை தெரிவிக்கும் அவர் மாற்றம் தேவைப்படுவதாக கூறியுள்ளார். இது பற்றி பிடிஐ இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

“கேப்டனின் வேலை எப்போதுமே முக்கியம். அவருடைய பாடி லாங்குவேஜ் தான் அணியின் பாடி லாங்குவேஜாக வரும். கேப்டன் தான் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். அதற்கு எடுத்துக்காட்டாக நீங்கள் ரோஹித் சர்மாவை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் விளையாடும் ஸ்டைலை பாருங்கள். அதன் காரணமாக லோயர் ஆர்டரில் வரும் பேட்ஸ்மேன் (அக்சர் படேல்) கூட தன்னம்பிக்கையுடன் விளையாடுகிறார்”

- Advertisement -

“ஏனெனில் நம்முடைய கேப்டன் ஆக்ரோசமான அட்டாக் செய்யும் கிரிக்கெட்டை விளையாடுவதாக அவர் உணர்கிறார். எனவே அணியில் கேப்டனின் வேலை முக்கியம் என்று நான் நம்புகிறேன். தற்போது பாகிஸ்தான் வாரியத் தலைவர் என்ன நினைக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் நம் அணியில் மாற்றம் தேவை. எப்போதும் நான் நம்முடைய அணிக்கு ஆதரவு கொடுப்பேன். இந்த உலகக் கோப்பை தோல்வியால் என்ன மாற்றம் நடக்கிறது என்பதை பார்ப்பதற்காக நான் காத்திருக்கிறேன்”

இதையும் படிங்க: சினிமா ஸ்கிரிப்ட் கூட இப்படி அமையாது.. அடுத்ததா இதை செய்வோம் வாங்க.. விராட், ரோஹித்தை வாழ்த்திய கம்பீர்

“நேர்மறையான முடிவு எடுக்கப்பட வேண்டும். ஏனெனில் நம்முடைய அடிப்படை கிரிக்கெட்டிலேயே உண்மையான பிரச்சினைகள் புதைந்துள்ளது. அடிப்படை அளவிலேயே நம்முடைய பொருள் பலவீனமாக இருக்கிறது. எனவே அங்கே நாம் முதலீடு செய்தால் நல்ல வீரர்கள் வளர்வார்கள்” என்று கூறியுள்ளார். முன்னதாக இத்தொடரில் பாபர் அசாம் தலைமையில் அமெரிக்கா, இந்தியா போன்ற அணிகளிடம் தோற்ற பாகிஸ்தான் லீக் சுற்றுடன் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement