யாரும் எதிர்பாரா வகையில் வித்தியாசமாக ஒரு வீரரை தேர்வு செய்த இந்திய அணி – விவரம் இதோ

INDvsENG
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. அதன்படி தற்போது இந்திய அணி பந்து வீச தயாராகி வருகிறது. ஆஸ்திரேலிய தொடரின் முதல் போட்டியோடு நாடு திரும்பிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.

இந்த போட்டியில் இந்திய அணியில் தேர்வு எவ்வாறு அமையும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில் விராட் கோலி சில வித்தியாசமான தேர்வுகளை இந்த போட்டியில் செய்துள்ளார். அதன்படி துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தொடர்கின்றனர். அதற்கடுத்து புஜாரா, கோலி, ரஹானே என பலமான மிடில் ஆர்டர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

- Advertisement -

அதுமட்டுமின்றி விக்கெட் கீப்பராக ஆஸ்திரேலிய தொடரில் அசத்திய ரிஷப் பண்ட் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். வாஷிங்டன் சுந்தர் மற்றும் அஸ்வின் என இரண்டு ஸ்பின்னர்களும் இஷாந்த் ஷர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களும் கடைசியாக 11வது வீரராக சிராஜ் விளையாடுவார் என்று எதிர்பார்த்தனர்.

Nadeem-1

ஆனால் ராஞ்சி நகரை சேர்ந்த இடதுகை ஸ்பின்னர் சபாஷ் நதீமை தேர்வு செய்துள்ளார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. ஏற்கனவே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ள அவரை மீண்டும் அணியில் சேர்த்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. ஏனெனில் கடந்த பல தொடர்களாகவே இளம் வீரரான குல்தீப் யாதவ் வாய்ப்பு இன்றி தவித்து வருகிறார்.

எனவே இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த போட்டியில் நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என அனைவரும் எதிர்பார்த்த வேளையில் அவருக்கு பதிலாக சபாஷ் நதீமுக்கு கோலி வாய்ப்பு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement