குல்தீப்க்கு திடீர் காயம். அவருக்கு பதிலாக விளையாடப்போகும் அதிர்ஷ்டசாலி யார் தெரியுமா – விவரம் இதோ

Kuldeep
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் இன்னும் சிறிது நேரத்தில் துவங்க இருக்கிறது. இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளதால் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டது.

umesh kuldeep

- Advertisement -

இதற்கிடையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று துவங்க உள்ளது. இந்த தொடரில் ஏற்கனவே இந்திய அணி வெற்றி பெற்று விட்டதால் மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்க்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அவருக்கு திடீரென இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்ட காரணமாக அவர் இந்த போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

குல்தீப்புக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் மற்றொரு சுழற்பந்து வீச்சாளராக சபாஷ் நதீம்-க்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் இன்று தனது அறிமுக டெஸ்ட்டில் களம் இறங்குவாரா என்று தெரியவில்லை. இருப்பினும் இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று 3 – 0 என்ற கணக்கில் தொடரை வெல்ல முயற்சிக்கும்.

Nadeem

சபாஷ் நதீம் ஜார்கண்ட் மாநில வீரராவார். இவர் இதுவரை 424 முதல் தர விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் பேட்டிங்கிலும் ஓரளவுக்கு சிறப்பாக விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement