நதீம் இன்று அறிமுகமாகினார் என்பது உங்களுக்கு தெரியும். அவருக்கும் தோனிக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றி தெரியுமா ? – விவரம் இதோ

Nadeem-1
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் 3வது டெஸ்ட் போட்டி தற்போது ராஞ்சி மைதானத்தில் இன்று துவங்கியது. இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றி தோல்வி தொடரை பாதிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்துவரும் இந்திய அணி இதுவரை 3 விக்கெட் இழப்பிற்கு ரன்கள் எடுத்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மாவிற்கு பதிலாக அறிமுக சுழற்பந்துவீச்சாளரான சபாஷ் நதீம் இந்த போட்டியின் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆனார்.

இதுவரை இந்திய சர்வதேச அணியில் இடம்பிடிக்காமல் இருந்த நதீம் இன்று தனது முதல் போட்டியில் விளையாட உள்ளார். இதற்கு முன்னதாக அவர் கடந்த 15 ஆண்டுகளாக முதல் தர போட்டிகளில் விளையாடி 424 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று மாலை காயம் அடைந்த குல்தீப்புக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட இவர் வெறும் 14 மணிநேரத்தில் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

Nadeem 2

இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் தோனி தலைமையிலான முதல் தர போட்டியில் ஜார்கண்ட் அணிக்காக அறிமுகமாகி விளையாடியது குறிப்பிடத்தக்கது. ஜார்கண்ட் மாநிலத்தில் பெரிய வீரராக தோனியே வலம் வந்தார். இந்நிலையில் அதே மாநிலத்தின் மற்றொரு வீரராக நதீம் இந்திய அணியில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

Advertisement