- Advertisement -
ஐ.பி.எல்

பேட்டிங்லயே கண்டுபிடிச்சுட்டேன்.. ஆர்சிபி மாதிரி இப்போ கொண்டாட மாட்டோம்.. ஆட்டநாயகன் சபாஷ் அஹ்மத் பேட்டி

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டிக்கு ஹைதெராபாத் 2வது அணியாக தகுதி பெற்றது. மே 22ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெற்ற குவாலிபயர் 2 போட்டியில் ராஜஸ்தானை 36 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் 176 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக ஹென்றிச் க்ளாஸென் 50, ராகுல் திரிபாதி 37 ரன்கள் எடுத்தனர்.

ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஆவேஷ் கான், டிரெண்ட் போல்ட் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து சேசிங் செய்த ராஜஸ்தான் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாட முடியாமல் 20 ஓவரில் 139/7 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 42, துருவ் ஜுரேல் 56* ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

வென்ற பின்பே கொண்டாட்டம்:
அதனால் 2008க்குப்பின் 2வது கோப்பையை வெல்ல முடியாமல் ராஜஸ்தான் பரிதாபமாக வெளியேறியது. மறுபுறம் ஃபைனலில் கொல்கத்தாவை எதிர்கொள்வதற்கு தகுதி பெற்ற ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக 4 ஓவரில் 23 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்து வெற்றியில் முக்கிய பங்காற்றிய சபாஷ் அகமது ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் பேட்டிங்கில் 18 (18) ரன்கள் எடுத்த போதே பிட்ச் எப்படி இருக்கிறது என்பதை ஆவேஷ் கான், சந்தீப் சர்மா பவுலிங்கை பார்த்து தெரிந்து கொண்டதாக சபாஷ் அஹமத் கூறியுள்ளார். அத்துடன் ஆர்சிபி அணியை போல் தற்போது கொண்டாடாமல் ஃபைனலில் கொல்கத்தாவை வீழ்த்தி கோப்பையை வென்ற பின் கொண்டாடுவோம் என்று மறைமுகமாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “சூழ்நிலைகளுக்கு தகுந்தார் போல் உன்னை பயன்படுத்துவோம் என்று கேப்டனும் பயிற்சியாளரும் என்னிடம் கூறியிருந்தனர்”

- Advertisement -

“பேட்டிங்கில் லோயர் ஆர்டரில் விளையாடுவதே என்னுடைய வேலையாகும். ஒருவேளை ஆரம்பத்திலேயே சரிவு ஏற்பட்டால் என்னை பயன்படுத்துவோம் என்று அணி நிர்வாகம் சொன்னார்கள். பேட்டிங் செய்யும் போது பிட்ச்சில் ஏதோ இருப்பதாக நான் உணர்ந்தேன். குறிப்பாக ஆவேஷ் கான், சந்தீப் சர்மா ஆகிய ராஜஸ்தான் வீரர்களின் பவுலிங் அதை காண்பித்தது”

இதையும் படிங்க: 36 ரன்ஸ்.. ராஜஸ்தானை அழவைத்த ஹைதராபாத்.. ஃபைனலுக்கு சென்று டெக்கான் சார்ஜர்ஸின் 15 வருட சாதனை சமன்

“இந்த முக்கியமான போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்றதை பெருமையாக உணர்கிறேன். எங்களுடைய அணி மிகவும் ரிலாக்ஸாக இருக்கிறது. ஃபைனலில் கோப்பையை வென்ற பின்பே நாங்கள் கொண்டாடுவோம். எனவே இன்றிரவு நாங்கள் ரிலாக்ஸ் மட்டுமே செய்வோம்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து மே 26 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் மாபெரும் இறுதி போட்டியில் கொல்கத்தா – ஹைதராபாத் அணிகள் கோப்பையை வெல்வதற்காக பலப்பரீட்சை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -