36 ரன்ஸ்.. ராஜஸ்தானை அழவைத்த ஹைதராபாத்.. ஃபைனலுக்கு சென்று டெக்கான் சார்ஜர்ஸின் 15 வருட சாதனை சமன்

SRH vs RR 5
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே 24ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு தமிழகத்தின் தலைநகர் சென்னையில் குவாலிபயர் 2 போட்டி நடைபெற்றது. அதில் குவாலிபயர் 1 போட்டியில் கொல்கத்தாவிடம் தோற்ற ஹைதராபாத் அணியை எலிமினேட்டரில் பெங்களூருவை வீழ்த்திய ராஜஸ்தான் எதிர்கொண்டது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத்துக்கு அதிரடியாக விளையாட முயற்சித்த அபிஷேக் சர்மா 12 (5) ரன்களில் ட்ரெண்ட் போல்ட் வேகத்தில் அவுட்டானார். அதே போல அடுத்ததாக வந்த ராகுல் திரிபாதி அதிரடியாக 37 (15) ரன்கள் எடுத்த போது அவுட்டாக்கிய ட்ரெண்ட் போல்ட் அதற்கடுத்ததாக வந்த ஐடன் மார்க்ரமை 1 (2) ரன்னில் காலி செய்தார்.

- Advertisement -

ஃபைனலில் ஹைதராபாத்:
அதனால் 57/3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய ஹைதராபாத் அணியை மறுபுறம் நிதானமாக விளையாடி காப்பாற்ற முயற்சித்த மற்றொரு துவக்க வீரர் ட்ராவிஸ் ஹெட் 34 (28) ரன்களில் அவுட்டானார். அப்போது வந்த நிதிஷ் ரெட்டி 5, அப்துல் சமத் 0 ரன்களில் ஆவேஷ் கான் வேகத்தில் ஆட்டமிழந்தனர். இருப்பினும் எதிர்புறம் 5வது இடத்தில் களமிறங்கி அசத்தலாக விளையாடிய ஹென்றிச் க்ளாசென் 50 (34) ரன்கள் விளாசி அவுட்டானார்.

இறுதியில் சபாஷ் அகமது 18, கேப்டன் கம்மின்ஸ் 5*, உனட்கட் 5 ரன்கள் எடுத்ததால் 20 ஓவரில் ஹைதராபாத் 175/9 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் 3, ஆவேஷ் கான் 3, சந்தீப் சர்மா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 176 ரன்களை துரத்திய ஹைதராபாத் அணிக்கு ஆரம்பத்திலேயே திணறிய டாம் கோலர்-கேட்மோர் 10 (16) ரன்னில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார்.

- Advertisement -

இருப்பினும் மறுபுறம் அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 42 (21) ரன்கள் விளாசி நல்ல துவக்கத்தை கொடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் அடுத்ததாக வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் மிகவும் தடுமாற்றமாக விளையாடி 10 (11) ரன்னில் அபிஷேக் சர்மா சுழலில் சிக்கினார். அதே போல எதிர்ப்புறம் தடுமாறிய ரியான் பராக்கை 6 (10) ரன்னில் காலி செய்த சபாஷ் அகமது அடுத்ததாக வந்த அஸ்வினையும் டக் அவுட்டாக்கினார்.

அதனால் 79/5 என தடுமாறிய ராஜஸ்தானுக்கு துருவ் ஜூரேல் அதிரடியாக விளையாடிய போதிலும் எதிர்ப்புறம் ஹெட்மயர் 4, போவல் 6 ரன்களில் அவுட்டாகி கை கொடுக்க தவறினார்கள். இறுதியில் ஜூரேல் அதிரடியாக 56* (35) ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் 139/7 ரன்கள் மட்டுமே எடுத்த ராஜஸ்தான் தோல்வியை சந்தித்து 2008க்குப்பின் 2வது கோப்பையை வெல்ல முடியாமல் பரிதாபமாக வெளியேறியது.

- Advertisement -

மறுபுறம் 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஹைதராபாத் மே 26இல் நடைபெறும் இறுதிப் போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்ள தகுதி பெற்றது. குறிப்பாக கடந்த வருடம் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்த லீக் சுற்றுடன் வெளியேறிய ஹைதெராபாத் இம்முறை பட் கமின்ஸ் தலைமையில் ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ளது.

இதையும் படிங்க: 175 ரன்ஸ்.. போராடிய ஹைதராபாத்தை மடக்கிய ராஜஸ்தான்.. சஹால் படுமோசமான ஐபிஎல் சாதனை

ஹைதெராபாத்துக்கு அதிகபட்சமாக பகுதி நேர பவுலர்களான அபிஷேக் ஷர்மா 3, சபாஷ் அஹமத் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் முந்தைய வருடம் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தாலும் அடுத்த வருடம் ஃபைனலுக்கு தகுதி பெற்ற என்ற டெக்கான் சார்ஜர்ஸ் சாதனையை ஹைதராபாத் சமன் செய்தது. இதற்கு முன் கடந்த 2008இல் கடைசி இடத்தைப் பிடித்த டெக்கான் சார்ஜர்ஸ் 2009இல் ஃபைனலுக்கு தகுதி பெற்று பின்னர் கோப்பையும் வென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement