
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளுடன் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவில் கோலாகலமாக துவங்கியது. இந்த வருடம் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ஒரு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. அந்தப் போட்டிக்கு முன்பாக கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் ஸ்ரேயா கோஷல், கரண் அஜில மற்றும் பாலிவுட் நடிகை திசா படானி பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக்கான் 2 அணிகளை அறிமுகப்படுத்தினார். அப்போது பெங்களூருவுக்காக விளையாடும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியை அவர் வரவேற்றார். 2008இல் ஐபிஎல் துவங்கப்பட்டது முதல் ஒரே அணிக்காக விளையாடி வரும் ஒரே வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
அதை குறிக்கும் வகையில் ஓஜி அதாவது ஒரிஜினல் பிளேயர் என்று சொன்ன ஷாருக்கான் 22 யார்டின் கிங் என்றும் விராட் கோலியை வர்ணித்தார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரிலும் விராட் பாய் மட்டுமே ஒரே தொடரில் விளையாடி வருகிறார். அவர் தான் ஓஜி. கோட் ஆஃப் ஐபிஎல்”
“22 யார்ட் மற்றும் பில்லியன் மக்கள் இதயங்களின் கிங். அந்த ஒரே ஒரு கோட் மிஸ்டர் கிங் கோலிக்கு வரவேற்பு கொடுங்கள்” என்று ஷாருக்கான் சொன்னார். அப்படி சொன்னதும் கொல்கத்தா மைதானத்தில் இருந்த அத்தனை ரசிகர்களும் கோலி கோலி என்று கூச்சலிட்டு வரவேற்பு கொடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட விராட் கோலி “இந்த அன்பான அறிமுகத்துக்கு நன்றி சாருக் பாய்”
“புதிய தலைமுறை மெதுவாக நன்றாக வருகிறது. அதே சமயம் பழைய தலைமுறை இன்னும் இருக்கிறது. இப்போதும் போட்டியில் விளையாடி தாக்கத்தை ஏற்படுத்தி இந்த ரசிகர்களின் மனதில் நல்ல நினைவுகளை உருவாக்க தயாராக இருக்கிறேன்” என்று கூறினார். அப்படியே “ஜோமே ஜோ பதான்” என்ற பாடலுக்கும் அவர்கள் இருவரும் சேர்ந்து நடனம் ஆடினார்கள்.
இதையும் படிங்க: இந்த வருஷமும் அவங்க தான் ஐ.பி.எல் கோப்பையை ஜெயிக்க சான்ஸ் இருக்கு – கங்குலி வெளிப்படை
அத்துடன் கொல்கத்தா இளம் வீரர் ரிங்கு சிங் தைரியமான இளம் தலைமுறை, விராட் கோலி தங்கத்தைப் போன்ற பழைய தலைமுறை என்று ஷாருக்கான் கூறினார். ஆனால் தாம் எப்போதும் வயதாகாத பழைய தலைமுறை என்றும் அவர் கலகலப்பாக பேசினார். அத்துடன் ரிங்கு சிங்குடன் சேர்ந்து அவர் மற்றொரு பாடலுக்கு நடனமாடினார். இறுதியில் 18 வருடங்களாக ஒரே விளையாடி சாதனை படைத்து வரும் விராட் கோலிக்கு பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி நினைவுப் பரிசை வழங்கினார்.