23 ஃபோர்ஸ் 8 சிக்ஸ் 205 ரன்ஸ்.. லேடி சேவாக் என்பதை நிரூபித்த ஷபாலி வர்மா.. 26 வருட இரட்டை உலக சாதனை

Shafali Verma
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிகள் மோதும் ஒரு டெஸ்ட் போட்டி ஜூன் 28ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா ஆகியோர் ஜோடி சேர்ந்து தென்னாப்பிரிக்காவை வெளுத்து வாங்கினர்.

அதில் சமீபத்திய ஒருநாள் தொடரில் 2 சதங்கள் அடித்து நல்ல ஃபார்மில் இருக்கும் மந்தனா இப்போட்டியிலும் தென்னாப்பிரிக்காவை மிகச்சிறப்பாக எதிர்கொண்டார். மறுபுறம் ஷபாலி வர்மா அவரை விட அதிரடியாக விளையாடினார். அந்த வகையில் நேரம் செல்ல செல்ல நங்கூரமாக விளையாடிய இந்த ஜோடியில் இருவருமே சதமடித்து 259 ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வலுப்படுத்திய போது பிரிந்தனர்.

- Advertisement -

லேடி சேவாக்கின் சாதனை:
அதில் மந்தனா 27 பவுண்டரி 1 சிக்சருடன் 149 (161) ரன்கள் குவித்து அவுட்டானார். அடுத்ததாக வந்த சுபா சதீஷ் 15 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். ஆனால் எதிர்ப்புறம் தொடர்ந்து தென்னாப்பிரிக்க வீராங்கனைகளை வெளுத்து வாங்கிய ஷபாலி வர்மா 194 ரன்களில் இருந்த போது சேவாக் போலவே சிக்ஸருடன் தன்னுடைய இரட்டை சதத்தை தொட்டார்.

கடந்த காலங்களில் அதிரடியாக விளையாடி லேடி சேவாக் என்று இந்திய ரசிகர்களால் பாராட்டப்பட்ட அவர் அதை இந்தப் போட்டியிலும் நிரூபித்து 23 பவுண்டரி 8 சிக்சருடன் 205 (197) ரன்களை 104.06 ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து ஆட்டமிழந்தார். குறிப்பாக 194 பந்துகளில் 200 ரன்கள் அடித்த அவர் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக இரட்டை சதமடித்த வீராங்கனை என்ற மாபெரும் உலக சாதனை படைத்தார்.

- Advertisement -

இதற்கு முன் இதே 2024ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை அனபெல் சதர்லாந்த் 256 பந்துகளில் இரட்டை சதமடித்ததே முந்தைய சாதனையாகும். இது போக மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீராங்கனை என்ற 26 வருட உலக சாதனையும் ஷபாலி வர்மா படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 1998ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கை வீராங்கனை வனிஷா போவன் 100+ ஸ்ட்ரைக் ரேட்டில் வெறும் 63 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க: 2007-ல வெஸ்ட் இண்டீஸ் விட்டதை மீண்டும் அங்கேயே பிடிக்க காத்திருக்கும் ராகுல் டிராவிட் – தரமான சம்பவம்

அத்துடன் மிதாலி ராஜூக்கு பின் மகளிர் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த இந்திய வீராங்கனை மற்றும் இளம் வயதில் இரட்டை சதமடித்த இந்திய வீராங்கனை ஆகிய சாதனைகளையும் அவர் படைத்தார். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் ஜெமிமா ரோட்ரிகஸ் 54, கேப்டன் ஹர்மன்ப்ரீத் 42*, ரிச்சா கோஸ் 43* ரன்கள் எடுத்ததால் முதல் நாள் முடிவில் இந்தியா 525/4 ரன்கள் குவித்தது. அதனால் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் நாளில் அதிக ரன்கள் குவித்த அணியாக இந்தியா உலக சாதனை படைத்தது.

Advertisement