2007-ல வெஸ்ட் இண்டீஸ் விட்டதை மீண்டும் அங்கேயே பிடிக்க காத்திருக்கும் ராகுல் டிராவிட் – தரமான சம்பவம்

Dravid
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஜூன் 29-ஆம் தேதி பார்படாஸ் நகரில் நடைபெற இருக்கும் இந்த முக்கிய இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்த்து விளையாடி இருக்கும் இந்திய அணியானது சாம்பியன் பட்டத்தை வென்று கோப்பையுடன் நாடு திரும்ப வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

கடைசியாக 2013-ஆம் ஆண்டு இந்திய அணி தோனியின் தலைமையில் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றியது. அதன் பிறகு எந்த ஒரு ஐசிசி கோப்பையும் கைப்பற்றாதால் இம்முறை கோப்பையை கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற உத்வேகத்துடன் இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் மிகச் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது.

- Advertisement -

இந்த இந்திய அணியை ராகுல் டிராவிட் பயிற்சியாளராக தலைமை தாங்கி வழிநடத்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாகவே டிராவிடின் தலைமையில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வந்தாலும் இதுவரை ஐசிசி கோப்பையை வெல்லவில்லை. அதோடு இந்த டி20 உலக கோப்பை தொடருடன் டிராவிட் பதவி விலக இருப்பதாக ஏற்கனவே அறிவித்துவிட்டதால் இந்த கோப்பையை வென்று அவரை வெற்றியுடன் வழி அனுப்ப வேண்டும் என்றும் பல்வேறு முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் தனிப்பட்ட வகையிலும் டிராவிடுக்கு இந்த கோப்பை மிகவும் முக்கியமானது என்றும் கூறலாம். ஏனெனில் 2007-ஆம் ஆண்டு தவறவிட்ட அவரது வெற்றியை தற்போது 17 ஆண்டுகளாக காத்திருந்து இந்த டி20 உலகக்கோப்பை வெற்றியின் மூலம் அவர் பழிதீர்க்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஏனெனில் கடந்த 2007-ஆம் ஆண்டு இதே வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் தான் டிராவிட் தலைமையிலான இந்திய அணி 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றது. அந்த தொடரில் டிராவிட் தலைமையிலான இந்திய அணியில் பல்வேறு நட்சத்திர வீரர்கள் இருந்தும் இலங்கை மற்றும் வங்கதேச அணியிடம் தோல்வியை சந்தித்து லீக் சுற்றோடு வெளியேறியது. அந்த தோல்வி இந்திய அணியின் மோசமான தோல்வியாக இன்றளவும் பார்க்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : ப்ளீஸ் இறுதிப்போட்டியிலாவது ஷிவம் துபேவை தூக்கிட்டு அவரை விளையாட வையுங்க – ரசிகர்கள் கோரிக்கை

இந்நிலையில் தற்போது 17 ஆண்டுகள் கழித்து அதே வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் தற்போது டி20 உலக கோப்பை தொடரின் பயிற்சியாளராக இருக்கும் அவர் இந்திய அணியின் வெற்றிக்கு வழி வகுத்து இந்த கோப்பையை வெல்வதன் மூலம் 2007-ல் தவறவிட்ட வெற்றிக்கு இந்த வெற்றியின் மூலம் பழிதீர்க்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement