சச்சின் 17 வயதில் செய்த சாதனை தற்போது செய்து வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ள ஷபாலி வர்மா – விவரம் இதோ

சச்சின்
- Advertisement -

இந்திய அணியின் ஜாம்பவான் வீரரும், ரசிகர்களின் மத்தியில் கிரிக்கெட் கடவுளாகவும் பார்க்கப்படும் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் படைக்காத சாதனைகளே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு தன்வசம் பல்வேறு சாதனைகளை கையில் வைத்துள்ளார். இந்நிலையில் தற்போது சச்சினின் முக்கியமான சாதனை ஒன்றை நெருக்கத்தில் எட்டிப் பிடித்துள்ளார் இந்திய அணியின் பெண்கள் வீராங்கனையான ஷபாலி வர்மா.

Sachin

- Advertisement -

கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி இந்திய ஆண்கள் அணி இங்கிலாந்து புறப்பட்டபோது அவர்களுடன் சேர்ந்து மகளிர் அணியும் இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் கிரிக்கெட் தொடருக்காக ஒரே விமானத்தில் பயணித்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது அவர்கள் இங்கிலாந்து பெண்கள் அணிக்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்த தொடரின் முதல் போட்டியில் தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது.

இந்த டெஸ்ட் போட்டியில் முதன் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு அறிமுகமான ஷபாலி வர்மா முதல் இன்னிங்சில் 96 ரன்கள் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். இருப்பினும் தற்போது நடைபெற்று வரும் இரண்டாவது இன்னிங்சிலும் அவர் தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 55 எடுத்து ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார்.

ஷபாலி வர்மா

அதன்மூலம் தற்போது இவர் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு வரலாற்று சாதனை படைத்துள்ளார். அந்த சாதனை யாதெனில் மிக இளம் வயதில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒரே போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் 50 ரன்களுக்கு மேல் அடித்த வீரர் என்ற பட்டியலில் இவர் தற்போது சச்சினுக்கு அடுத்து இரண்டாவது இடம் பிடித்துள்ளார். சச்சின் கடந்த 1990ஆம் ஆண்டு தனது 17 வயது 107நாட்களில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் 50 ரன்களுக்கு மேல் அடித்திருந்தார்.

அவரைத் தொடர்ந்து தற்போது 17 வயது 139 நாட்களில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டு இன்னிங்ஸ்களிலும் அறிமுக போட்டியிலேயே 50 ரன்களை கடந்து ஷபாலி வர்மா அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கடந்து 2019 ஆம் ஆண்டு டி20 போட்டிகளில் அறிமுகமான ஷபாலி வர்மா 22 போட்டிகளில் விளையாடி 617 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement