அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வை அறிவித்த – சி.எஸ்.கே வீரர்

Jagati

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான கோவாவை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான ஜகாதி அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வினை அறிவித்துள்ளார். ஜகாதி கடந்த 1998 போட்டிகளில் தனது ஆட்டத்தை தொடங்கிய கடந்த அவர் 2017-ம் ஆண்டு வரை முதல்தர போட்டிகளில் விளையாடி வந்தார்.

jagati 2

92 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 275 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் லிஸ்ட் ஏ பிரிவில் 82 போட்டிகளில் விளையாடி 92 விக்கெட்டுகளை அவர் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி தலைமையில் அவர் விளையாடி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட ஜகாதி அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் தனது பயணம் முடிந்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் 23 ஆண்டுகளாக அவருக்கு உதவிய பிசிசிஐ மற்றும் கோவா கிரிக்கெட்டுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

jagati 1

மேலும் மற்றொரு ட்விட்டர் பதிவில் இந்த தருணத்தில் எனது பயணத்தை திரும்பிப் பார்க்கிறேன் இந்த நேரத்தில் எனக்கு துணையாக இருந்த குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் தோள் கொடுத்தவர் என அனைவருக்கும் நன்றி என்றும் பிசிசிஐ மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர்கள், சக வீரர்கள் என அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்து கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -