டெஸ்ட் கிரிக்கெட் விசித்திர சாதனை படைத்த கேப்டன் கோலி – இப்படி ஒரு சாதனையா ?

Kohli

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் பங்களாதேஷ் அணி 106 ரன்களுக்கு ஆட்டம் இழக்க இந்திய அணி தனது முதல் இன்னிங்சை விளையாடியது.

Kohli-1

அதன்படி நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 174 ரன்கள் எடுக்க இன்று தொடர்ந்து விளையாடிய இந்திய அணி மேலும் சிறப்பாக விளையாடி 347 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இந்திய அணி கேப்டன் விராட்கோலி சிறப்பாக விளையாடி சதம் அடித்து 136 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரஹானே 51 ரன்களுக்கும், புஜாரா 55 ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர்.

அதனை தொடர்ந்து தற்போது வங்கதேச அணி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. வங்கதேச அணி இந்திய அணியை விட 241 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளதால் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது என்றே கூறலாம். ஏனெனில் முதல் போட்டியைப் போலவே இந்த போட்டியிலும் இந்திய அணி டிக்ளேர் செய்து இரண்டாவது நாளிலேயே கோலி பங்களாதேசை பேட்டிங் செய்ய பணித்தார்.

Kohli

இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கேப்டனாக கோலி ஒரு புதிய சாதனை ஒன்றினை புரிந்துள்ளார். அதுயாதெனில் இந்த போட்டியில் கேப்டன் கோலி டிக்ளேர் செய்ததன் மூலம் தொடர்ந்து 7 இன்னிங்ஸ்களை அவர் தொடர்ச்சியாக டிக்ளேர் கொடுத்த சர்வதேச டெஸ்ட் கேப்டன் என்ற அறிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இதற்கு முன்னர் 2009 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஆண்ட்ரு ஸ்ட்ராஸ் 6 முறை தொடர்ந்து டிக்ளேர் செய்து அந்த சாதனையை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -