பூர்வீகம் சென்னை எங்க குடும்பம் நாகப்பட்டினத்தில் இருக்கு தமிழ்தான் வீட்ல பேசுவோம் தெ.ஆ வீரர் – பேட்டி

Muthusamy
- Advertisement -

இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி தற்போது விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தென்னாபிரிக்க அணி சார்பாக இடம் பெற்றுள்ள சீனுரான் முத்துசாமி என்கிற வீரர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதன்படி சீனுரான் முத்துசாமி அவர்களது பெற்றோர்கள் அவர் பிறக்கும் முன் தமிழ்நாட்டிலிருந்து தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகருக்கு குடிபெயர்ந்தனர். அங்கே முத்துசாமி பிறந்ததால் அவருக்கு தென் ஆப்பிரிக்க நாட்டு குடியுரிமை கிடைத்தது. அதன் பிறகு அந்த ஊர் உள்ளூர் போட்டிகளில் விளையாடி தற்போது தேசிய அணியில் பங்கேற்று விளையாடி வருவது குறித்து அவர் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

எங்கள் பூர்வேகம் சென்னை ஆனால் நாங்கள் தென்னாபிரிக்கா இடம்பெயர்ந்து விட்டோம் மேலும் எங்களது உறவினர்கள் இன்னும் நாகப்பட்டினத்தில் வசித்து வருகின்றனர். எங்கள் குடும்பத்தில் அனைவரும் தமிழ் நன்கு பேசக்கூடியவர்கள் தென் ஆப்பிரிக்காவிலும் நான் தமிழ் கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்டுதான் வாழ்ந்து வருகிறோம். இந்தியாவுக்கு வந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

Maharaj

மேலும் தமிழ் பாரம்பரியம் மற்றும் இந்திய கலாச்சாரம் ஆகியவை எங்களை விட்டு இன்னும் அகலவில்லை. தென்ஆப்பிரிக்க அணியில் இடம் பெற வேண்டும் என்ற நீண்ட நாள் கனவு நிறைவேறியது என் பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் என் பூர்வீக நாடான இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடுவது எனக்கு மகிழ்ச்சியாக இல்லை. நான் டர்பன் நகரில் உள்ள தமிழ் கோயில்களுக்கு சென்று வருகிறேன் என் குடும்பத்தில் உறவினர்கள் எல்லாரும் தமிழில் தான் பேசுவார்கள் ஆனால் நான் தாமதமாகத்தான் தற்போது தமிழ் மொழியை கற்று வருகிறேன் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement