சர்ச்சையை ஏற்படுத்திய முத்துசாமியின் விக்கெட். ஐசிசி-யிடம் இப்படியும் ஒரு விதி இருக்கிறதா ? – அசரவைக்கும் ரூல் இதோ

Muthusamy
- Advertisement -

நேற்றைய போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஜடேஜாவின் பந்து வீச்சில் முத்துசாமி 7 ரன்களில் இருந்தபோது எல்பிடபிள்யூ முறை மூலம் ஆட்டமிழந்தார். பந்து ஆஃப் ஸ்டம்பிற்க்கு வெளியில் பட்டு முத்துசாமியின் கால் பகுதியின் பட்டது. இருப்பினும் அதனை அம்பயர் அவுட் கொடுத்தார்.

muthusamy 2

- Advertisement -

உடனே முத்துசாமி ரிவியூ கேட்டார் அதிலும் பந்து தெளிவாக ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே நீண்ட தூரத்தில் பிட்ச் ஆகியிருந்தாலும் பந்து நேராக ஸ்டம்பை இடித்ததால் அவுட் கொடுக்கப்பட்டது. மேலும் இதற்கான விளக்கமும் அம்பயர் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. பொதுவாக இம்பேக்ட் லைன் என்று சொல்லப்படும் ஸ்டம்ப் லைனில் பந்து பட்டால் மட்டுமே எல்பி கொடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் நேற்றைய போட்டியில் ஐசிசி விதிப்படி முத்துசாமி அவுட் கொடுக்கப்பட்டது என்றும் மேலும் அந்த விதி யாதெனில் ஐசிசியின் விதிப்படி டெஸ்ட் போட்டியில் பந்து மைதானத்தில் எந்த பகுதியில் பட்டு ஸ்டம்பை நோக்கி வந்தாலும் பேட்ஸ்மேன் தனது பேட்டை கொண்டு ஏதாவது ஒரு ஷாட்டை ஆட முயற்சித்து இருக்கவேண்டும். ஆனால் எந்தவித ஷாட்டையும் ஆடாமல் கால் பகுதியில் வாங்கினால் அப்படி வாங்கும்போது பந்து ஸ்டம்பில் பட்டால் அவுட் என்று ஒரு விதிமுறை உள்ளது.

Muthusamy 1

எனவே அந்த விதியின் அடிப்படையில் ஜடேஜாவின் பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியில் பட்டிருந்தாலும் கடைசியில் பந்து ஸ்டம்ப்பை நோக்கி வந்து இடித்தது. அப்போது முத்துசாமி அந்த பந்தினை எந்தவொரு ஷாட்டிற்கும் முயற்சி செய்யாத காரணத்தினால் அவர் எல்பிடபிள்யூ முறை மூலம் அவுட் கொடுத்து வெளியேற்றப்பட்டார்.

Advertisement