முதல் போட்டியில் இந்திய அணி நிர்வாகம் நோட் பண்ண இருக்கும் 3 வீரர்கள் – கொஞ்சம் ஜாக்கிரதை

Ind-2
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று துவங்க உள்ளது. அதன்படி முதலாவது ஒருநாள் போட்டியில் இன்று இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள தர்மசாலாவில் மோதுகிறது.

Ind

- Advertisement -

சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற தொடரில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணி அதற்கு அந்த தோல்வியிலிருந்து வெளிவரும் விதமாக இந்த தொடரில் வெற்றியுடன் பயணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த போட்டியின் இந்திய அணி நிர்வாகம் மற்றும் தேர்வுக்குழு ஆகிய முக்கிய 3 வீரர்களின் திறனை சற்று அதிகமாக உற்றுநோக்கும் என்று தெரிய வந்துள்ளது. அதன்படி முதுகுவலி காயத்தினால் கடந்த பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள பாண்டியா இந்த போட்டியில் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Pandya

அதே நேரத்தில் ஷிகர் தவான் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோரும் தங்களது தாக்கத்தை நிரூபித்தாக வேண்டும். ஏனெனில் ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா தற்போது காயம் காரணமாக விளையாடாமல் இருப்பதால் அவருக்கு பதில் ப்ரித்வி ஷா அணியில் விளையாடி வருகிறார். அதுமட்டுமின்றி கில் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் மயங்க் அகர்வால் தனது இடத்திற்காக காத்திருக்கிறார். ஷிகர் தவான் ஒருவேளை சொதப்பும் பட்சத்தில் அவருக்கு பதிலாக கில் அல்லது ராகுல் அந்த இடத்தை பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராகுலும் தொடக்க வீரராக சிறப்பாக விளையாடுவார் என்பதால் அவரும் அந்த இடத்தை உற்று நோக்கி உள்ளார்.

எனவே தேர்வுக்குழு ஷிகர் தவானின் ஆட்டத்தை எதிர்நோக்கியுள்ளது. அதுமட்டுமின்றி காயம் காரணமாக இவ்வளவு நாள் விளையாடாமல் இருந்த புவனேஸ்வர் குமார் பந்துவீச்சும் இன்று பரிசோதிக்கப்படும். ஏனெனில் இளம் வீரர்கள் சைனி, தாகூர் மற்றும் தீபக் சாஹர் என பலர் வாய்ப்புக்காக காத்திருப்பதால் அவருடைய ஆட்டமும் இன்று நிச்சயம் நிர்வாகத்தால் பரிசோதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement