தோனியை 7 அதிசயங்களுடன் வித்தியாசமான முறையில் ஒப்பிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிய சேவாக்

Sehwag
- Advertisement -

இந்திய அணியை பொறுத்தவரை தோனி ஒரு மிகச் சிறந்த கேப்டனாக விளங்கியவர். மேலும் மூன்று வகையான icc தொடர்களையும் கேப்டனாக இருந்து இந்திய அணிக்காக பெற்று கொடுத்துள்ளார் . இன்று அவருடைய பிறந்தநாள் இதனால் தற்போது தோனி வாழ்த்துமழையில் நனைந்து வருகிறார்.

Dhoni

- Advertisement -

தோனியின் பிறந்தநாளான இன்று அவருக்கு ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் தற்போதைய வீரர்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் வித்தியாசமான முறையில் கூறியுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் சேவாக் பதிவிட்டதாவது : உலகில் மொத்தம் 7 கண்டங்கள், வாரத்திற்கு மொத்தம் 7 நாட்கள், வானவில்க்கு மொத்தம் 7 நிறங்கள், இசைக்கு மொத்தம் 7 ஸ்வரங்கள், மனிதர்களுக்கு 7 சக்கரம், கல்யாணத்திற்கு 7 பொருத்தம், உலகிற்கு 7 அதிசயம் மேலும் 7 ஆம் தேதி 7ஆம் மாதம் கிரிக்கெட் உலகின் அதிசயத்திற்கு பிறந்தநாள் என்று வித்தியாசமான முறையில் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.

சேவாக்கின் இந்த விமர்சையான வாழ்த்தினை தோனியின் ரசிகர்கள் பலரும் தொடர்ந்து பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement