சேவாக் மனைவி மீது 4.5 கோடி கடன். கோர்ட்டில் இருந்து நோட்டீஸ் – புகார் கொடுத்த சேவாக் மனைவி

Sehwag
Advertisement

இந்திய அணியின் முன்னாள் ஓபனிங் பேட்ஸ்மேன் விரேந்திர சேவாக்கின் மனைவி ஆர்த்தி சேவாக் தனது பிசினஸ் பார்ட்னர்கள் மீது ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் தன்னுடைய கையெழுத்து போலவே வேறு ஒரு கையெழுத்து போட்டு சில நிறுவனங்களில் இருந்து நாலரை கோடி ருபாய் தனது பாட்னர்கள் கடன் வாங்கி இருக்கிறார்கள் என்று புகார் கொடுத்துளார்களாம்.

Sehwag 1

அப்படி வாங்கிய கடனையும் ஒழுங்காக திருப்பி செலுத்தவில்லையாம் அதோடு ஆர்த்தி சேவாக்கின் பிசினஸ் பார்ட்னர்கள் சேவாக்கின் பெயரை கூறி மயக்கி கடன் வாங்கியதாகவும் அந்தக் கடனை திருப்பிக் கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் சரியான நேரத்தில் கடனை திருப்பி தராததால் மற்றும் கொடுத்த காசோலைகள் எதுவும் வங்கி கணக்கில் பணம் இல்லை என்பதாலும் பணம் கொடுத்தவர்கள் ஆர்த்தி சேவாக்கிற்கு வக்கீல் நோட்டீஸ் விட்டிருக்கிறார்கள்.

- Advertisement -

அந்த அதன்மூலமே ஆர்த்தி சேவாக்கிற்கு நாலரை கோடி ரூபாய் கடன் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் கோபமடைந்த சிவன் தனது பிசினஸ் பார்ட்னர்கள் மீது போலீஸ் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

sehwag

அதன்படி அவர்களின் பிசினஸ் பாட்னர்கள் மீது ipc 420, 468, 471 மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது. சேவாக் மற்றும் ஆர்த்திக்கு கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement