உலகக்கோப்பை டி20 தொடரில் இந்த 2 பவுலர்கள் வேணாம். நடராஜன் போதும் – அதிரடி கருத்தை வெளியிட்ட சேவாக்

sehwag
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி 3 ஒருநாள் தொடரில் ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று தொடரை இழந்தது. இதையடுத்து ஆக்ரோஷத்துடன் விளையாடிய இந்திய அணி டி20 தொடரில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்திய அணி விளையாடி 6 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு தமிழகத்தைச் சேர்ந்த நடராஜனின் பந்து வீச்சும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. இதையடுத்து ஹார்திக் பாண்டியாவின் பேட்டிங்கும் சிறப்பாக அமைந்திருந்தது. இதன் மூலம் இந்திய அணி தனது பலத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

Nattu

- Advertisement -

இதையடுத்து 2020ஆம் ஆண்டு நடைபெற இருந்த டி20 உலக கோப்பை தொடர் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 2021ஆம் ஆண்டிற்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது. ஐசிசி தலைமையில் நடைபெறும் இந்த டி20 உலக கோப்பை தொடரை இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொடரை கைப்பற்ற அனைத்து அணிகளும் தங்களை தயார் செய்து வருகின்றன. இந்திய அணியும் தற்போது இந்த உலகக்கோப்பை தொடரை குறிவைத்து விளையாடி வருகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் டி20 உலக கோப்பைக்காக தனது வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்துள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட நடராஜன் இந்திய அணியில் அறிமுகமாக முக்கிய காரணமாக இருந்தவர் விரேந்திர சேவாக் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் பஞ்சாப் அணிக்காக முதல்முறை ஐ.பி.எல் தொடரில் ஏலம் எடுத்தவர் சேவாக் தான்.

Nattu-1

உலகக்கோப்பை டி20 தொடருக்கான இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் சேவாக் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான தீபக் சாகர் மற்றும் முகமது சமி ஆகிய இருவரையும் தேர்வு செய்யாதது அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. புவனேஸ்வர் குமார், நடராஜன் மற்றும் பும்ரா ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார். இவர்களின் கூட்டணி இந்திய அணிக்கு மிகவும் பலம் வாய்ந்ததாக மாற்றியமைக்கும் என்றார்.

Chahar-1

அதுமட்டுமின்றி இவர்களின் கூட்டணி எதிரணி வீரர்களை திணற வைக்கும் என்றார். தற்போது அறிமுகமாகிய நடராஜன் பும்ராவை போலவே சிறப்பாக செயல்படுவதாக அறிவித்துள்ளார் விரேந்திர சேவாக். நடராஜன் இந்திய அணியின் நிரந்தர பந்து வீச்சாளராக மாறிவருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement