- Advertisement -
ஐ.பி.எல்

புவனேஷ்வர் குமாருக்கு இந்த வாய்ப்பை கொடுத்தா அதில் எந்த தப்பும் இல்ல – வீரேந்திர சேவாக் கோரிக்கை

அகமதாபாத் நகரில் நேற்று நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 42 ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆர்.சி.பி அணி 155 ரன்களை மட்டுமே குவிக்க அடுத்ததாக விளையாடிய குஜராத் அணி 15.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

புவனேஷ்வர் குமாருக்கு மீண்டும் வாய்ப்பு தாங்க : சேவாக் கோரிக்கை

இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆர்.சி.பி அணி 155 ரன்களை மட்டுமே குவித்திருந்தாலும் பந்துவீச்சில் போராட்ட குணத்தை வெளிப்படுத்தியது பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் 4 ஓவர்கள் பந்துவீசி 28 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

அவரது இந்த சிறப்பான பந்துவீச்சு பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வரும் வேளையில் அவரின் வயதை கணக்கில் கொள்ளாமல் மீண்டும் அவருக்கு இந்திய டி20 அணியில் வாய்ப்பினை வழங்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்தவகையில் அவர் கூறியதாவது : இந்த சீசனில் புவனேஷ்வர் குமார் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார்.

அதிலும் குறிப்பாக ஒவ்வொரு போட்டியிலும் 2 – 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார். நேற்றைய குஜராத் அணிக்கு எதிரான போட்டியிலும் 3 விக்கெட்டுகளை எடுத்து பெங்களூரு அணிக்கு நம்பிக்கையை தந்தார். எனவே அவரது வயதை கணக்கில் கொள்ளாமல் அவருக்கு மீண்டும் இந்திய டி20 அணியில் வாய்ப்பை வழங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அந்த அளவிற்கு அவருடைய பந்துவீச்சு சிறப்பாக இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : விராட் கோலிக்கு எதிராக காகிஸோ ரபாடா நிகழ்த்திய அசத்தல் சாதனை – விவரம் இதோ

புதிய பந்திலும் சரி, பழைய பந்திலும் சரி சிறப்பாக பந்துவீசும் அவர் பும்ராவுடன் இணைந்து பந்துவீசினால் அது நிச்சயம் இந்திய அணிக்கு பலத்தை சேர்க்கும் அதோடு பேட்ஸ்மேன்கள் தற்போது மிக அதிரடியாக விளையாடும் நிலை ஏற்படும் அவர் ஓவருக்கு 8 ரன்களுக்கும் குறைவாகவே விட்டுக்கொடுக்கிறார். அதனால் அவரை இந்திய டி20 அணியில் பார்க்க தான் ஆவலாக உள்ளதாகவும் சேவாக் பேசியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -