தோனியின் முகத்திற்கு நேராக இதை கூறுங்கள். அப்போது தான் தோனிக்கு புரியும் – சேவாக் ஓபன் டாக்

sehwag
- Advertisement -

உலக கோப்பை தொடரில் இருந்து இந்தியா வெளியேறி பிறகு தோனியின் ஓய்வு பற்றிய பேச்சு முக்கியமாக இருந்து வருகிறது. அரையிறுதிப் போட்டியில் அவர் ரன் அவுட் ஆனதில் இருந்து அவரது ஓய்வு குறித்த விவகாரம் சூடுபிடிக்க துவங்கியது.

Dhoni-2

- Advertisement -

உலகக் கோப்பை தொடர் முடிந்து ஓய்வு அறிவிப்பு வெளியிடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் தோனி இதுவரை தனது ஓய்வு குறித்து எந்த ஒரு அறிவிப்பினையும் கொடுக்கவில்லை. மேலும் இந்திய அணியில் தோனி தற்போது தேர்வாவது சந்தேகமாக உள்ளது. மேலும் பி.சி.சி.ஐ அவருக்கு ஓய்வு முடிவினை எடுக்க நெருக்கடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் பிசிசிஐ-க்கு தோனியின் ஓய்வு விவகாரம் குறித்து ஒரு கருத்தை வழங்கியுள்ளார். அதில் அவர் கூறியதாவது : தோனியிடம் நிலைமையை சொல்வது தேர்வாளர்களின் கடமை இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக இனியும் உங்களால் தொடர முடியாது என்பதை தோனியிடம் அவர்கள் நேரில் தெரிவிக்க வேண்டும் அதன் பிறகு அவர் எப்போது ஓய்வு பெறவேண்டும் என்பதை அவரே முடிவு செய்து கொள்ளட்டும் என்று சேவாக் கருத்து வழங்கியுள்ளார்.

Dhoni

வர இருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தொடரில் தோனி இடம்பெறுவது என்பது சந்தேகம்தான் பிசிசிஐ நிர்வாகம் நிச்சயம் தோனியை நிராகரிக்கவே முடிவு செய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement