நியூசிலாந்து அணிக்கெதிராக இவங்க ரெண்டு பேரும் நிச்சயமா சேர்ந்து ஆடணும் – சேவாக் ஓபன்டாக்

Sehwag
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி இன்னும் சில தினங்களில் துவங்க உள்ள நிலையில் இந்த இறுதி போட்டியில் இந்திய அணியில் யார் ? யார் ? களமிறங்க போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இந்திய அணியின் பேட்டிங் வரிசை வழக்கமானதை போலவே அமைய பந்துவீச்சு வரிசை எவ்வாறு அமையப் போகிறது என்பதே பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

INDvsNZ

- Advertisement -

ஏனெனில் இந்திய அணியில் முகமது ஷமி, பும்ரா, இஷாந்த் சர்மா, ஷர்துல் தாகூர், முஹம்மது சிராஜ், ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வின் என நிறைய பவுலர்கள் உள்ளனர். இதில் 5 பவுலர்களை எவ்வாறு இந்திய அணி தேர்வு செய்யப் போகிறது என்பதே பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்நிலையில் இந்த பந்துவீச்சு காம்பினேஷன் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரரான விரேந்திர சேவாக் கூறுகையில் :

இந்திய அணி நிச்சயம் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரண்டு சுழற்பந்துவீச்சாளர் உடன் விளையாடுவது மிகவும் நல்லது. ஏனெனில் ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் சிறப்பாக பந்து வீசுவது மட்டுமின்றி பின்வரிசையில் கணிசமான ரன்களை குவிக்க கூடியவர்கள். எனவே இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் இவர்கள் இருவரும் சேர்ந்து ஆடுவதன் மூலம் வலுப்படும். அதுமட்டுமின்றி இந்திய அணியில் தற்போது உள்ள வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ashwin 2

எனவே அவர்கள் பந்துவீச்சில் அசத்துவார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இதன் காரணமாக நிச்சயம் அஸ்வின் ஜடேஜா ஆகியோர் இணைந்து விளையாட வேண்டும் என நான் நினைக்கிறேன். பதினெட்டாம் தேதி மைதானம் எப்படி இருக்கப் போகிறது என்பதை கணித்து தான் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்வார்கள் என்று நினைக்கிறேன்.

Jadeja-2

எனக்கு இப்போதும் நம்பிக்கை இருக்கிறது நிச்சயம் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தால் போட்டியின் நான்காவது மற்றும் ஐந்தாவது நாள் நிச்சயம் அவர்கள் சிறப்பாக பந்து வீச முடியும் என்று சேவாக் குறிப்பிட்டுள்ளார். இந்திய அணி தற்போது தங்களுக்குள்ளே இரு அணிகளாகப் பிரிந்து பயிற்சி போட்டியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மற்றும் கில் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement