டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் : இவங்க ரெண்டு பேருக்கு எதிரா தான் செம போட்டி இருக்கு – சேவாக் ஓபன்டாக்

Sehwag
- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியின் வேகப் பந்து வீச்சாளரானா ட்ரெண்ட் போல்டுக்கும் இந்திய அணியின் மிக முக்கியமான பேட்ஸ்மேனாக திகழும் ஒரு வீரருக்கும் இடையில் கடும்போட்டி நிலவும் என்றும், சமபலம் வாய்ந்த இந்த இருவரும் ஒருவரை எதிர்த்து மற்றொருவர் எப்படி விளையாடப் போகிறார்கள் என்பதை காண தான் ஆவலாக உள்ளதாகவும் கருத்து தெரிவித்து இருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக்.

INDvsNZ

- Advertisement -

கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர், இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் வருகிற 18ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள ஏஜஸ் பவுல் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தவிருக்கும் நிலையில், இந்த போட்டி குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் வீரேந்திர சேவாக். தனியார் இணையதளம் ஒன்றிர்கு பேட்டியளித்திருக்கும் அவர் அந்த பேட்டியில் கூறியதாவது,

நியூசிலாந்து அணியில் டிம் சௌத்தீ மற்றும் ட்ரெண்ட் போல்ட் என இரண்டு உலக தரம் வாய்ந்த வேகப் பந்து வீச்சாளர்கள் உள்ளனர். பந்தை இரண்டு பக்கமும் ஸ்விங் செய்யும் திறமையைப் இந்த இணை பெற்றிருப்பதால் இந்த இறுதிப் போட்டியானது மிக கடினமாக இருக்கும் என்று கூறிய அவர், அதில் ட்ரெண்ட் போல்ட்டையும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மாவையும் குறிப்பிட்டு பேசியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர்,

boult

ட்ரெண்ட் போல்ட் மற்றும் ரோஹித் சர்மா இந்த இருவருக்கும் இடையிலான மோதல்தான் இந்த இறுதிப் போட்டியில் நான் எதிர்பார்க்கும் ஒரு விடயமாக இருக்கிறது. இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனான ரோஹித் சர்மா பேட்டிங்கில் செட்டாகி விட்டால் அதிரடியாக ஆடும் திறமை உடையவர். அதே சமயம் நியூசிலாந்து அணியின் ரெண்ட் போல்ட் தொடக்க ஓவர்களை மிகச் சிறப்பா வீசக் கூடியவர். எனவே ஒருவரை எதிர்த்து மற்றொரு எப்படி செயல்படபோகிறார் என்பதை பார்க்க நான் ஆவலாக உள்ளேன் என்று அந்த பேட்டியில் அவர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஐபிஎல் தொடர்களில் ரோஹித் சர்மா மற்றும் ட்ரெண்ட் போல்ட் என இருவரும் மும்பை அணிக்காக ஒன்றாக விளையாடி வருகின்றனர். ரோஹித் சர்மா எப்படி பேட்டிங் விளையாடுவார் என்பது போல்ட்டிற்கு தெரியும். அதே சமயம் போல்ட் எந்த மாதிரயாக யோசிப்பார் எந்த மாதிரியான பந்துகளை வீசுவார் என்று ரோஹித் சர்மாவிற்கும் தெரியும் என்பதால், இவர்களுக்கு இடையிலான மோதல் சுவாரஸ்யமானதாகவே இருக்கப் போகிறது. அந்த பேட்டியில் மேலும் பேசிய சேவாக், இங்கிலாந்தில் ரோஹித் சர்மாவின் அனுபவம் அவருக்கு கைகொடுக்கும் என்றும் கூறியிருக்கிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் ரோஹித் சர்மா இடம்பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பேசிய சேவாக்,

Rohith

சமீப காலமாகவே இந்திய டெஸ்ட் அணியில் ரோஹித் சர்மா மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். மேலும் இங்கிலந்தில் ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் அவருக்கு இருப்பதால், அதைப் பயன்படுத்தி இந்த இறுதிப் போட்டியில் அதிக ரன்களை அவர் அடிப்பார் என்று நம்புகிறேன். முதல் பத்து ஓவர்கள் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களுக்கு சவாலானதாக இருக்கும். ஆனால் அவர் அதை சரியாக எதிர்கொண்டு சிறப்பாக விளையாடுவார் என்றும் அந்த பேட்டியில் அவர் கூறியிருக்கிறார். இங்கிலாந்து சென்றிருக்கும் இந்திய அணி வீரர்களுக்கு இறுதிப் போட்டிக்கு முன்பாக எந்த ஒரு பயிற்சி பபயிற்சி போட்டியும் இல்லாததால் தற்போது இரண்டு அணிகளாக பிரிந்து இன்ட்ரா ஸ்குவாட் பயிற்சிப் போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.

Advertisement