எங்களது காலத்தில் யோ-யோ டெஸ்ட் இருந்திருந்தா இந்த 3 ஜாம்பவான்களும் விளையாடி இருக்க முடியாது – சேவாக் அதிரடி

Sehwag
- Advertisement -

இந்திய அணியில் சேர்வதற்கு தற்போது வீரர்களின் உடற்தகுதி அவசியமாக உள்ளது. யோயோ டெஸ்டில் நிர்ணயிக்கப்படும் புள்ளிகளை எட்ட வேண்டும் அல்லது இரண்டு கிலோ மீட்டர் ஓட்டத்தை குறிப்பிட்ட நிமிடத்திற்குள் முடிக்க வேண்டும். இப்படி இரண்டு உடற்தகுதி தேர்வு பின்னரே தற்போது இந்திய அணியில் வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். முன்னரெல்லாம் திறனை வைத்து மட்டுமே இந்திய அணியில் இடம் பிடிக்கலாம்.

- Advertisement -

ஆனால் இப்போது இந்திய அணியில் இடம்பிடிக்க உடற்தகுதி என்பது அவசியமாகி உள்ளது. மேலும் பி.சி.சி.ஐ இந்திய அணியில் உள்ள வீரர்களுக்கு உடற்பயிற்சி சோதனையை அவ்வப்போது நடத்துவதை வாடிக்கையாக உள்ளது. இந்த யோயோ டெஸ்ட் காரணமாக சமீபத்தில் நடைபெற்ற டி20 தொடரில் ராகுல் திவாதியா மற்றும் வருன் சக்ரவர்த்தி ஆகியோர் இந்திய அணியில் இடம் கிடைக்கும் வாய்ப்பை தவற விட்டனர்.

இந்நிலையில் ஹார்டிக் பாண்டியா டி20 தொடரின் போது பந்து வீச போதுமான உடல் தகுதி இல்லாத போதே அவரை ஏன் சேர்க்க வேண்டும் ? வருண் சக்ரவர்த்தியை ஏன் சேர்க்கக்கூடாது ? என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார் .அதற்கு பதிலளித்த சேவாக் கூறுகையில் : நாங்கள் விளையாடிய காலத்தில் யோயோ டெஸ்டில் தேர்ச்சி பெற்றதை நான் பார்த்தது கிடையாது. நிர்ணயிக்கப்பட்டுள்ள யோ யோ டெஸ்ட் மதிப்பெண்களை ஒருவரும் ஒருபோதும் எட்டியிருப்பது கிடையாது.

Laxman

இந்திய அணியில் நான் விளையாடிக் கொண்டிருந்த காலத்தில் யோயோ டெஸ்ட் வைத்திருந்தால் அப்போதைய சிறந்த பேட்ஸ்மேன்களான கங்குலி, சச்சின், லட்சுமணன் மாதிரியான ஜாம்பவான்கள் கூட தேர்வாகி இருக்கமாட்டார்கள் என கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அப்போதெல்லாம் இந்திய அணியில் விளையாட ஃபிட்னஸ் டெஸ்டை காட்டிலும் வீரர்களின் திறன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அதன் காரணமாகவே பல ஜாம்பவான்கள் அணியில் இடம் பெற்று விளையாடினார்கள்.

ஆனால் அண்மைகாலமாக இந்திய அணியில் விளையாட வேண்டும் என்றால் யோ டெஸ்டில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அந்த வகையிலேயே திவாதியா, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடாமல் போனார்கள். எங்களது காலத்தில் இதுபோன்ற டெஸ்டுகள் வைத்திருந்தால் இதனை பேர் தேர்வாகி இருப்பார்கள் என என்னால் கூறமுடியாது. ஆனால் இப்போதைய சூழலில் யோயோ டெஸ்ட்டை இந்திய அணி கட்டாயமாக்கி இருக்கிறது என நேரடியான கருத்தை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement