விராட் கோலி சச்சினின் இந்த சாதனைகளை முறியடிப்பார் – சேவாக் உறுதி

Kohli-1 Sehwag
- Advertisement -

இந்திய அணி சச்சின் டெண்டுல்கரை அடுத்து இந்திய அணிக்கு அதிக ரன்கள் சேர்த்தவர் என்ற பெருமை கொண்டவர் விராத் கோலி. விராட் கோலி கடந்த சில ஆண்டுகளாக சச்சினின் பல சாதனைகளை விரைவாக நெருங்கிக் கொண்டிருக்கிறார்.

Kohli-1

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கோலியின் சாதனை குறித்து தற்போது பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : தற்போது உள்ள இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சச்சினின் சாதனைகள் பலவற்றை முறியடிப்பார் என்று நான் நம்புகிறேன். இந்த சூழ்நிலையில் உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்றால் நான் விராட்கோலி கூறுவேன்.

அவர் அடிக்கும் ரன்களும் அவர் அடிக்கும் சதங்களும் நிச்சயம் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை மிக விரைவில் விரட்டும் என்று கூறியுள்ளார். மேலும் இந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் இரண்டு சதங்களை அடித்து மூலம் 43 சதங்களை அவர் அடித்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

Kohli

இதுவரை விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 230 இன்னிங்ஸ்களில் 43 சதங்களை விளாசியுள்ளார். சச்சின் 452 இன்னிங்ஸ்களில் 49 சதங்களை விளாசி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இன்னும் 7 சதங்களை அடித்தால் சச்சினின் சாதனையை அவர் விரைவாக எட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

sachin-kohli

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சச்சினின் சாதனையை கோலி முறியடிப்பார் என்று சேவாக் உறுதியளித்துள்ளார். இதுவரை 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் டெண்டுல்கர் 51 சதங்கள் விளாசியுள்ளார். ஆனால் 77 டெஸ்ட் போட்டியில் கோலி 25 சதங்களை அடித்துள்ளார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே விரைவில் சச்சின் டெண்டுல்கர் சாதனையை விரைவில் அவர் கடப்பார் என்றும் உலகின் ஒப்பிட முடியாத வீரராக விராட் கோலி திகழ்வார் என்றும் சேவாக் கூறினார்.

Advertisement