உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் வின்னர் இவர்கள்தான் – சேவாக் கணிப்பு

sehwag
- Advertisement -

ஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி ஆஷஸ் தொடருடன் துவங்கியது. அதன் பின்னர் இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக உலக சாம்பியன்ஷிப் தொடரை வெற்றிகரமாக துவங்கியுள்ளது. ஒரு போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி 60 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

IND

- Advertisement -

மேலும் உலகின் நம்பர் ஒன் அணியாகவும் இந்திய அணி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் வெற்றியாளர்கள் பற்றி இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : தொடக்க ஆட்டத்தில் இந்தியாவின் செயல்திறன் திருப்தியாக உள்ளது. உலக சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா வெல்ல நிலையான ஆட்டத்தை தோடர்ந்து அளிக்க வேண்டும்.

2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் இறுதிப்போட்டியில் வரை இந்தியா காத்திருக்கவேண்டும். மேலும் இங்கிலாந்தில் நடைபெறும் அந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெறவும் செய்யலாம் அல்லது அந்த தொடர் சமநிலையில் முடியவும் வாய்ப்பு உள்ளது. 2 ஆண்டுகள் என்பது நீண்ட காலம் தற்போது இந்திய அணி நல்ல நிலைமையில் உள்ளது. அப்படி சமநிலையில் முடிந்தால் புள்ளிகளின் அடிப்படையில் இந்திய அணி வெற்றிபெற இந்த நிலையான ஆட்டங்கள் உதவும்.

எனவே இந்திய அணி தொடர்ச்சியான ஆட்டத்தை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எனவே இந்திய அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகிறது என்பது எனது கருத்து என்று சேவாக் கூறினார்.

Advertisement