நடராஜனை 3 கோடி கொடுத்து அப்பவே நான் ஏலம் எடுக்க இதுவே காரணம் – சேவாக் பகிர்ந்த ரகசியம்

Nattu-1
- Advertisement -

2017 ஆம் ஆண்டு சேலத்தைச் சேர்ந்த தங்கராசு நடராஜன் ஐபிஎல் தொடரில் யாரும் எதிர்பாராத நேரத்தில் பஞ்சாப் அணியால் 3 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார். அதற்கு முன்னர் நடந்த டிஎன்பிஎல் தொடரில் மிகச் சிறப்பாக பந்து வீசி தனது பெயரை ஐபிஎல் தொடருக்காக பதிவு செய்து வைத்திருந்தார். அவரும் கூட கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தன்னை ஏலத்தில் எடுக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அவரிடம் அப்படி ஒரு அற்புதமான திறமை இருக்கிறது. ஏற்கனவே டிஎன்பிஎல் தொடரில் சூப்பர் ஓவரில் 6 பந்துகளில் 6 ஏக்கர் வீசி தனக்கென ஒரு பெயரை பதித்திருந்தார்.

Nattu-2

- Advertisement -

இப்படி உருவான நடராஜன் ஹைதராபாத் அணிகாக தற்போது தேர்வு செய்யப்பட்டு தோனி, விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ் போன்ற வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி இதன்மூலம் இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சர்வதேச அளவில் அறிமுகமாகி முதல் டி20 போட்டிகளில் விளையாடி விட்டார். இவரது பந்துவீச்சு அனைவரையும் கவர்ந்திருக்கிறது.

இந்நிலையில் எப்படி நடராஜனை பஞ்சாப் அணியில் எடுத்தார் என்பது குறித்து அப்போதைய பஞ்சாப் அணியின் ஆலோசகர் விரேந்தர் சேவாக் தெரிவித்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறுகையில் : நான் அப்போது பணத்தை பற்றி பெரிதும் கவலைப் படவில்லை நடராஜனிடம் திறமை இருக்கிறது அதனை நான் பார்த்தேன். எங்கள் அணியில் ஒரு சில தமிழக வீரர்கள் இருந்தார்கள். அவர்கள் எல்லாம் நடராஜன் ஓவர்களில் மிகச் சிறப்பாக பந்து வீசும் ஒரு சிறந்த பந்துவீச்சாளர் என்று என்னிடம் கூறினார்கள்.

nattu 1

அதன் பின்னர் அவரது பந்துவீச்சு வீடியோவை பார்த்தேன். பின்னர் கண்டிப்பாக எவ்வளவு செலவானாலும் இவரை அணியில் எடுத்தே தீர வேண்டும் என்று முடிவு செய்தேன். துரதிஷ்டவசமாக அவருக்கு அந்த வருடம் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த வருடம் பல போட்டிகளில் அவர் ஆட முடியவில்லை. ஆனால் அவர் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றோம் என்று தெரிவித்திருக்கிறார் விரேந்தர் சேவாக்.

இந்நிலையில் தற்போது இந்திய அணியில் இடம்பிடித்த நடராஜன் அறிமுகமான ஒருநாள் போட்டியில் 2 விக்கெட்டுகளையும், தற்போது டி20 அறிமுக போட்டியில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement