கோலி, ஸ்மித் என யார் வந்தாலும் சச்சினின் இந்த சாதனையை ஒன்றும் செய்ய முடியாது – சேவாக் ஓபன் டாக்

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் இன்று (22 ஆம் தேதி) இவ்விரு அணிகளுக்கும் இடையே முதல் டெஸ்ட் போட்டி இன்று இரவு 7 மணிக்கு துவங்க உள்ளது.

virat

இந்நிலையில் சச்சின் சாதனையுடன் விராட் கோலியினை ஒப்பிட்டு இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : இந்திய அணி சச்சின் டெண்டுல்கரை அடுத்து இந்திய அணிக்கு அதிக ரன்கள் சேர்த்தவர் என்ற பெருமை கொண்டவர் விராத் கோலி. விராட் கோலி கடந்த சில ஆண்டுகளாக சச்சினின் பல சாதனைகளை விரைவாக நெருங்கிக் கொண்டிருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்றால் நான் விராட்கோலி என்றே கூறுவேன். அவர் அடிக்கும் ரன்களும் அவர் அடிக்கும் சதங்களும் நிச்சயம் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை மிக விரைவில் விரட்டும் என்று கூறியுள்ளார். இருப்பினும் சச்சினின் ஒரு சாதனையை இனிமேல் யாராலும் நெருங்க முடியாது.

sachin
sachin

அதுயாதெனில் சச்சின் இதுவரை 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த சாதனையை இனி எவராலும் முறியடிக்க முடியாது என்று நினைக்கிறன். கோலி மற்றும் ஸ்மித் மட்டும் அல்ல எவர் நினைத்தாலும் இனிவரும் காலங்களில் சச்சினின் ரன் எண்ணிக்கையை விரட்ட முடியுமே தவிர சச்சினின் இந்த 200 டெஸ்ட் போட்டிகள் சாதனையை தொடக்கூட முடியாது என்று சேவாக் கூறினார்.