கோலியை கூட நான் இப்படி பார்த்ததில்லை. இவர் வேற லெவல் – சேவாக் புகழாரம்

Sehwag

இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய பங்களாதேஷ் அணி 153 ரன்களை குவிக்க அதனை சேசிங் செய்த இந்திய அணி சிறப்பாக விளையாடி 15.3 ஓவர்களில் 154 ரன்களை குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Dhawan

இந்த போட்டியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக கேப்டன் ரோகித் சர்மா திகழ்ந்தார். 43 பந்துகளை சந்தித்த அவர் 6 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் என 85 ரன்கள் அடித்து அமர்க்கள படுத்தினார். அவரது அதிரடியால் இந்திய அணி நேற்று எளிமையான வெற்றியை பதிவு செய்தது மேலும் தொடரையும் சமன் செய்தது.

இந்நிலையில் வரும் 10 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் வெல்லும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் அந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு இப்போது அதிகரித்துள்ளது. இந்நிலையில் ரோகித் சர்மாவின் இந்த ஆட்டம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் கூறியதாவது : ஒரே ஓவரில் 3-4 சிக்சர்கள் அடிப்பதும் 45 பந்துகளில் 80 முதல் 90 ரன்கள் என்று விலாசுவதும் ஒரு கலை.

விராட் கோலி கேப்டனாக ஆடிய போது கூட அவரிடம் இதனை போன்ற அதிரடியை நான் பார்த்ததில்லை. ஆனால் ரோகித் இந்திய அணிக்காக தொடர்ந்து அதிரடியாக ஆடிவருவது என்னை ஆச்சரியப்பட வைக்கிறது என்று சேவாக் கூறினார். நேற்று ரோகித் விளையாடிய போட்டி அவரது 100 ஆவது டி20 போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -