தோனி கேப்டனாக இருந்தபோது இதைத்தான் செய்தார். அதேபோன்று இவருக்கு நிறைய சேன்ஸ் கொடுக்க வேண்டும் – சேவாக் வேண்டுகோள்

Sehwag
- Advertisement -

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடுவதற்காக நியூஸிலாந்து சென்றடைந்தது. இந்நிலையில் தோனிக்கு பிறகு இந்திய அணியில் நிலையான விக்கெட் கீப்பர் இல்லாத குறை இந்திய அணியிடம் உள்ளது. ஏனெனில் பண்பிற்கு இதுவரை அதிகபட்ச வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது.

Pant

- Advertisement -

ஆனாலும் பேட்ஸ்மேனாக ஓரளவு சிறப்பாக ஆடினாலும் விக்கெட் கீப்பிங் பல தவறுகளை தொடர்ந்து செய்து வருகிறார். அவருக்கு பதிலாக தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இரண்டு போட்டிகளில் ராகுல் விக்கெட் கீப்பராக சிறப்பாகவே செயல்பட்டார். அந்த இரண்டு போட்டிகளிலும் அவர் கீப்பிங்கில் செயல்பட்டு சிறப்பாக செயல்பட்டாலும் அவர் பேட்ஸ்மேனாக 5 ஆவது வீரராக களம் இறங்குவாரா ? அல்லது ஓப்பனிங்கில் விளையாடுவாரா ? என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் கூறியதாவது : 5 ஆவது வீரராக களமிறங்கி சிறப்பாக விளையாட விட்டால் இந்திய அணி நிர்வாகம் அவரின் இடம் குறித்து யோசிக்கும். ஆனால் தோனி கேப்டனாக இருந்தபோது இந்த மாதிரி பிரச்சனை எழுந்தது இல்லை. அவர் தனது பேட்டிங் வரிசையில் தெளிவாக இருந்தார். கீப்பிங் செய்து பிறகு பின் வரிசையில் நின்று இந்திய அணிக்கு சிறப்பான பினிஷிங் கொடுத்தார்.#

Rahul

மேலும் தான் கேப்டனாக இருக்கும் போது வீரர்களின் திறமையை அறிந்து அதற்கு ஏற்றார்போல் அவர் தொடர்ந்து வாய்ப்புகளையும் வழங்கினார். ஒரு சில போட்டிகளில் வீரர்கள் சோபிக்க தவறினாலும் ஓரமாக உட்கார வைப்பதன் மூலம் அவர்கள் சிறந்த வீரராக வர முடியாது அவர்களுக்கான வாய்ப்புகளை தொடர்ந்து வழங்க வேண்டும் என்றும் மேலும் ராகுல் விக்கெட் கீப்பராக அதிக வாய்ப்புகள் தர வேண்டுமென்றும் சேவாக் கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Rahul

ராகுல் ஏற்கனவே அளித்த பேட்டியில் தான் எந்த இடத்தில் இறங்கினாலும் அங்கு சிறப்பாக விளையாடமுடியும் என்று தெரிவித்து இருந்தார். மேலும் அணி நிர்வாகம் எங்கு தன்னை ஆடவைக்க விரும்புகிறதோ அங்கு களமிறங்கி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தயார் என்றும் ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement