இந்திய அணியில் இருந்து இவரை நீக்கியது நல்ல விஷயம் தான் – சேவாக் ஓபன் டாக்

sehwag
- Advertisement -

தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். கிட்டத்தட்ட 16 வருடங்கள் இந்திய அணியின் கேப்டனாகவும், ஒரு அதிரடி பேட்ஸ்மேன் ஆகவும், விக்கெட் கீப்பராகவும் மூன்று வீரர்களின் வேலையை தனி ஆளாக செய்து வந்தார். இதன் காரணமாக தோனிக்கு மாற்று வீரரை கடந்த சில வருடங்களாக இந்திய அணி தேடி வருகிறது.

Dhoni

- Advertisement -

அவருக்கான மாற்று வீரராக ரிஷப் பண்ட் களமிறக்கப்பட்டார். ஆனால் அவரால் அதனை சரியாக செய்யமுடியவில்லை. டி20, ஒருநாள், டெஸ்ட் என மூன்று விதமான போட்டிகளிலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கப்பட்டது. டெஸ்ட் போட்டிகளில் ஓரளவிற்கு நன்றாக ஆடி சதம் அடித்திருந்தார்.

ஆனால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவர் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான அவருக்கு கிடைத்த இடம் ஃபினிஷிங் ரோல் தான். இதன் காரணமாக அவரால் கடந்த சில வருடங்களாக சரியாக செயல்பட முடியவில்லை. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெறப்போகும் டெஸ்ட் ஒருநாள் டி20 ஆகிய போட்டிகளுக்கான அணி பிசிசிஐ கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது.

dhoni with pant

இதில் டெஸ்ட் போட்டியில் மட்டுமே ரிஷப் பண்ட் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார் அதேநேரத்தில் டி20 போட்டிகளில் சஞ்சு சாம்சன் இரண்டாவது விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இது குறித்து பேசியுள்ள விரேந்திர சேவாக் :

ரிஷப் பண்ட் தனது ஆட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கடைசியில் இறங்கி ஆட்டத்தை முடிக்க கற்றுக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் அவருக்கு அணியில் இடம் கிடைப்பது கடினம். இதன் காரணமாகத்தான் இந்த முறை அவர் அணியில் தனது இடத்தை இழந்து இருக்கிறார் என்று நினைக்கிறேன். இவ்வாறு தெரிவித்திருக்கிறார் விரேந்தர் சேவாக்.

Advertisement