இவரு ஒருத்தர் போதும் டி20 போட்டியை ஆட்டத்தை தலைகீழாக மாற்ற. இந்திய இளம்வீரரை புகழ்ந்த – சேவாக்

sehwag
- Advertisement -

கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கிரிக்கெட் தொடர்கள் நடைபெறும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா தொடர் ரத்து செய்யப்பட்டு தென்ஆப்பிரிக்க வீரர்கள் அவர்கள் நாட்டிற்கு திரும்பினார். மேலும் இங்கிலாந்து – இலங்கை தொடர், ஆஸ்திரேலியா – நியூஸிலாந்து தொடர் போன்றவையும் ரத்தாகி உள்ளன.

அது மட்டுமின்றி உலக அளவில் மிகப்பெரிய கிரிக்கெட் தொடரும், அதிகம் பணம் புழங்க கூடிய தொடர்பான ஐபிஎல் தொடரில் தற்போது மார்ச் 19 ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 25ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால் திட்டமிட்டபடி ஐ.பி.எல் தொடர் துவங்குமா ? என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏனெனில் கொரோனா தீவிரமாகி வரும் நிலையில் அதன் நிலைமை எப்படி இருக்கிறதோ அதன்படி ஐபிஎல் தொடர் அமையும்.

- Advertisement -

அதுமட்டுமின்றி அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் டி20 உலக கோப்பையில் திட்டமிட்டபடி நடைபெறுமா ? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஆனால் டி20 உலகக் கோப்பை அக்டோபர் மாதம் துவங்க உள்ளதால் அதற்குள் நிலைமை சீராகி அனைத்தும் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று ஆஸ்திரேலிய நிர்வாகம் அறிவித்துள்ளது. டி20 உலகக் கோப்பைக்கான அனைத்து அணிகளும் தீவிரமாக தற்போது தயாராகி வருகின்றன.

Pandya

டி20 உலகக் கோப்பைக்கான அணியை ஐபிஎல் தொடரை அடிப்படையாகக் கொண்டு சில வீரர்களை தேர்வு செய்யலாம் என்று அனைத்து அணிகளும் நினைத்திருந்த நிலையில் ஐபிஎல் நடப்பது சந்தேகமாக உள்ளது. எனினும் டி20 உலகக்கோப்பை அனைத்து அணிகளும் முழுவீச்சில் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் டி20 உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணி எது மற்றும் இந்திய அணியின் பலம் எது என்பது குறித்து இந்திய முன்னாள் சேவாக் பேசியுள்ளார்.

- Advertisement -

அதுகுறித்து அவர் குறிப்பிட்டதாவது : டி20 கிரிக்கெட் கிரிக்கெட்டை பொறுத்தவரை யார் வெற்றி பெறுவார் என்பதை கணிக்க முடியாது. ஏனெனில் அந்த ஒரு குறிப்பிட்ட தினத்தில் ஒரே ஒரு வீரர் அவருக்கான வாய்ப்பு அமைந்துவிட்டால் அந்த ஒரே வீரர் போட்டியை தலைகீழாக மாற்றி ஆட்டத்தின் முடிவை மாற்றிவிட முடியும். இது அந்த மாதிரியான ஃபார்மேட் இந்திய அணியை பொறுத்தவரை ஒருவர் போட்டியை முழுவதுமாக மாற்ற முடியும் என்றால் ஹார்டிக் பாண்டியா இந்திய அணிக்கு மிகப்பெரிய பலம்.

Pandya

அவரது திறன் மூலம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார். டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் மொத்த பலமாக ஹர்திக் பாண்டியா திகழ்வார் என்று தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடாமல் இருந்த ஹார்டிக் பாண்டியா தற்போது உள்ளூர் போட்டிகளில் அடுத்தடுத்து இரண்டு சதங்களை 37 மற்றும் 39 பந்துகளில் அடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement