இனிமே அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பது ரொம்ப கஷ்டம் – சேவாக் ஓபன்டாக்

virender sehwag
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரானது இலங்கையில் நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரில் இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று துவங்க இருக்கிறது.

deepak 2

- Advertisement -

இந்த தொடரில் இந்திய அணியில் இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஏனெனில் முதன்மை இந்திய அணியானது இங்கிலாந்தில் உள்ள நிலையில் ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் இந்த தொடரானது அமைந்தது. அதன்படி ஒருநாள் கிரிக்கெட்டில் பல இந்திய வீரர்கள் அறிமுகமாகினர். குறிப்பாக இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சன், நித்திஷ் ராணா, கிருஷ்ணப்பா கவுதம், சேத்தன் சகாரியா, ராகுல் சாகர் ஆகியோர் அறிமுகமாகினர்.

இந்த தொடரில் ஏற்கனவே அறிமுகமான இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். இந்நிலையில் இந்த ஒருநாள் தொடரில் மோசமாக விளையாடிய இந்திய அணியின் முன்னணி வீரரான மனிஷ் பாண்டே குறித்து சேவாக் தனது காட்டமான கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அனைத்து போட்டிகளிலும் இடம்பெற்ற மணிஷ் பாண்டே தன்னை நிரூபிக்க தவறிவிட்டார்.

pandey

இந்த தொடரில் மணிஷ் பாண்டே, ஹார்திக் பாண்டியா ஆகியோர் ரொம்பவே திணறினார்கள் அவர்களின் ஆட்டம் என்னை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மூன்று போட்டிகளிலுமே மனிஷ் பாண்டேவால் பெரிய ரன்களை குவிக்க முடியவில்லை. அவருக்கு இனிமேல் வாய்ப்பு கிடைக்காது என அவர் தெரிவித்துள்ளார். சேவாக் கூறியது போலவே இந்திய அணிக்காக பல ஆண்டுகளாக விளையாடி வரும் மணிஷ் பாண்டே அவ்வப்போது வாய்ப்புகளைப் பெற்று விளையாடி வந்தாலும் அவரால் பெரிய இன்னிங்சை விளையாட முடியவில்லை.

Pandey-1

இதுவரை இந்திய அணி நிர்வாகம் அவரின் மீது உள்ள நம்பிக்கையால் வாய்ப்பை தொடர்ந்து வழங்கி வந்தது. ஆனாலும் அவரால் அணி நிர்வாகத்தின் இந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி அவர்களை திருப்தி செய்ய முடியவில்லை. எனவே இனிவரும் காலங்களில் மணிஷ் பாண்டேவிற்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement